வந்தேபாரத் ரயில்கள் 2025ம் ஆண்டில் ஏற்றுமதி
கடந்த 9 ஆண்டுகளில் இந்திய ரயில்வே நிர்வாகம் பெரிய அளவில் அசுரத்தனமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
மோடி அரசு பொறுப்பேற்றது முதல் நம் இந்திய ரயில்வே நிர்வாகம் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் 25 சதவீதம் ரெயில்வே வருமானம் அதிகரித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில். 1.74 லட்சம் கோடி ரூபாயாக இருந்த ரயில்வே வருமானம், 22-23ம் ஆண்டில் 2.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. சுதந்திரம் பெற்றது முதல் அதாவது 1947ம் ஆண்டு முதல், 2014ம் ஆண்டு வரை இந்தியாவில் 24,866 ரயில் கிலோ மீட்டர்கள் மின்சாரயமாக மாற்றப்பட்டது. ஆனால் 2014ம் ஆண்டில் இருந்து 2023ம் ஆண்டு வரை 58812 ரயில் கிலோ மீட்டர்கள் மின்சாரமயம் ஆக்கப்பட்டிருக்கிறது.
2014ம் ஆண்டில் 28174 கோடி ரூபாய் ரயில்வேயின் வளர்ச்சிக்கு செலவு செய்யப்பட்டிருந்தது. இன்றைக்கு, 2,40,000 கோடி அளவிற்கு வளர்ச்சி செலவு செய்யப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டில் 1350 ரெயில் கிலோமீட்டர் ரயில்பாதை மின்சார வழித்தடமாக மாற்றப்பட்டது. இன்றைக்கு, ஆண்டிற்கு 6565 ரெயில் கிலோ மீட்டர்கள் மின்சாரமயமாக மாற்றப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டிற்கு பின்னர் தற்போது வரை இந்திய ரயில்வேயின் சரக்கு கையாளும் திறன் ஆறு மடங்கு வரை அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டில் 264 ஆக இருந்த எலக்ட்ரிக் லோகோக்கள் தற்போது 1185 ஆக உயர்ந்துள்ளது. 2023ம் ஆண்டில் ஹைட்ரஜன் ரயில் இந்தியாவில் இயங்க தொடங்கியது.
ஆளில்லாத ரயில்வே கேட்டுகள் எண்ணிக்கை 2022ம் ஆண்டில் நாடு முழுவதும் 755 ஆக குறைந்து விட்டது. வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் இயங்க தொடங்கி உள்ளன. 2025ம் ஆண்டு ஐரோப்பாவிற்கு வந்தே பாரத் ரயில்களை இந்தியா ஏற்றுமதி செய்யப்போகிறது. நிறைய ரயில் ப்ராஜக்டுகள், அதிக வேகத்தில் நடக்கிறது. 100 சதவீதம் கவச் எனும், டெக்னிக்கால் எதிரெதிர் ரயில் வருவது தடுக்கப்படும் போது ரயில் விபத்துக்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு விடும்.