இங்கிலாந்தை நடுங்க வைத்த இந்திய ராஜதந்திரம்
இங்கிலாந்தை சில மணி நேரங்களில் இந்தியா நடுங்க வைத்ததை கண்டு உலகமே வியப்பில் ஆழ்ந்து நிற்கிறது.;
இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து இன்னும் அதே மிதப்பில் தான் இருக்கிறது போல தெரிகிறது. கடந்த வாரம் காலிஸ்தான் பிரிவினை வாதிகள் லண்டனில் உள்ள இந்திய துாதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். இந்திய துாதரகத்தில் காலிஸ்தான் கொடியேற்ற முயற்சித்தனர். இதனை தடுக்காமல், இந்திய துாதரகத்திற்கு பாதுகாப்பு தராமல் வேடிக்கை பார்த்தது இங்கிலாந்து அரசு. இதற்காக இந்தியா எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. துாதரகத்திற்கு பாதுகாப்பு தாருங்கள் என கெஞ்சவும் இல்லை.
டெல்லியில் உள்ள இங்கிலாந்து துாதரகத்திற்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பினை இந்தியா விலக்கிக் கொண்டது. இங்கிலாந்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலிஸ்தான் தீவிரவாதிகளை கண்டித்து சீக்கிய அமைப்புகள் டெல்லியில் உள்ள இங்கிலாந்து துாதரகத்தை முற்றுகையிட்டனர். இதனை இந்தியா வேடிக்கை பார்த்தது.
அவ்வளவு தான் நடுங்கிப்போனது இங்கிலாந்து. உடனடியாக லண்டனில் உள்ள இந்திய துாதரகத்திற்கு 20 பஸ்களில் மாபெரும் போலீஸ் படையினை அனுப்பி வைத்து மூன்றடுக்கு பாதுகாப்பு கொடுத்தது. இந்திய துாதரகத்தில் மீண்டும் நம் தேசியக்கொடி பட்டொளி வீசிப்பறந்தது.
இதனை சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்த இந்தியா, மீண்டும் டெல்லியில் உள்ள இந்திய துாதரகத்திற்கு வழக்கமான பாதுகாப்பினை கொடுத்தது. இந்தியா கெஞ்சும், பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்த்த உலக வல்லரசின் ஒரு நாடான இங்கிலாந்து நொடிப்பொழுதில் இந்தியாவின் நடவடிக்கையால் ஆடிப்போனது. இதனை கண்டு, இந்தியாவின் இந்த அதிரடியை கண்டு ஒட்டுமொத்த உலகமும் மோடியின் தலைமையிலான இந்தியாவை வியந்து போய் பார்த்து வருகின்றன. இந்தியாவின் உலகளாவிய ஆளுமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.