இந்திய ஜனநாயகம் -அமெரிக்க ஜனநாயகம்: இடையே உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா ?
உலகின் நீண்ட ஜனநாயகம் என்றால் அமெரிக்கா வையும், பெரிய ஜனநாயகம் என்றால் இந்தியாவையும் சொல்வோம்.;
ஆனால் இந்த இரு ஜனநாயக நாடுகள் எலியும் பூனையுமாகவே இருக்கிறது ஏன்? இந்திய ஜனநாயகத்திற்கும், அமெரிக்க ஜனநாயகதிற்கும் உள்ள வேறுபாடு என்ன? முதலில் வித்தியாசம் இருக்கிறதா?கண்டிப்பாக இருக்கிறது.எளிமையாக சொல்லப்போனால் அமெரிக்க ஜனநாயகம் என்பது Bureaucratic என்று சொல்லலாம். அதாவது Rules based democratic. அது என்ன ரூல்? சட்ட்ங்களின் அடிப்படையில் நடக்கும் ஒரு அரசு.
ஒரு நாட்டின் ஜனநாயகம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்போம். அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் சட்டங்களை இயற்றி அதன் வழியில் அரசு அதிகாரிகள் மூலம் மக்களை வழி நடத்துவதே. அந்த சட்டங்கள் காலப்போக்கில் மாற்றத்துக்கு உள்ளாகும் எனும்போது தேவையான மாற்றத்தை செய்ய வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு. ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்தது ஜனநாயகமா? ஜனநாயகம் தான்! பெருவாரியான மக்கள் என்ன நினைக்கிறார்களோ அது போல நாடு நடக்கும் என்றால் அது தவறல்லவா? தவறாக இருக்கலாம், ஆனால் அது ஜனநாயகம்தான். அதாவது பெருவாரியான மக்கள் சொல்வதே சரி என்பதுதான் ஜனநாயகம்.
எனவே மக்கள் தவறு செய்வார்கள் என்று எதிர்பார்த்து, அதற்கு ஏற்ப சட்டங்கள் இயற்றி, அதை அரசு அதிகாரிகள் கையில் கொடுத்து விட்ட பின்பு, அந்த சட்டதிட்டங்களுக்கு ஏற்பவே மக்களும், மன்னனும் நடக்க வேண்டும். அங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னனாக இருந்தாலும், அந்த அதிகாரிகள் பலமானவர்களக இருப்பார்கள். எனவேதான் அந்த பணித்துறை அதிகாரிகள் விதிகளை மீறி நடக்காமல் பார்த்துக் கொள்வார் என்பதால் அவர்களுக்கு அதிகாரம் அதிகம். நம்மில் ஆட்சியர், போலீஸ் துறை என்பது அப்படிப்பட்டது.
அப்படிப்பட்ட அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுகளை Bureaucratic Government என்று சொல்வார்கள். அமெரிக்காவில் ஜனநாயகம் என்பது நீண்ட நாளாக இருப்பதால், ஈரோடு சம்பங்கள் போல வந்த பின்னர், அதை மனதில் நிறுத்தி, கற்ற பாடங்களைக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சட்ட திட்டங்கள் அமெரிக்காவில் பலப்படுத்தப்பட்டது.
ஆனால் இந்தியாவின் புதிய ஜனநாயகம் என்பது 75 வருடங்கள் மட்டுமே ஆனது. அதில் 60 ஆண்டுகள் தவறானவர்கள் கையில் ஆட்சி இருந்தது என்பதால், இன்னும் நமது சட்டதிட்டங்களை பலப்படுத்த முடியவில்லை. அதனால் நமது அரசாங்கம் என்பது Adhocracy என்று அரசியல்வாதிகளின் அல்லது தனிப்பட்டவர்களின் கட்டமைப்பில் உள்ளது.
இந்த நம் அரசை Adhocracy இல் இருந்து Bureaucracy க்கு மாற்றும் பணியை மோடி செய்து கொண்டிருக்கிறார். அந்த பணியை முடித்த பின், அல்லது அதற்கான அடிப்படைகளை செய்த பின்னர் அவர் பதவி விலகி விடுவார். மோடி அதை 2026 க்கு முன்பு செய்து முடிக்க நினைக்கிறார்.
ஆனால் Bureaucracy தான் சரியா என்றால், ஆம் என்று சொல்ல முடியாது. அதிகாரிகளின் ஆளுமை அதிகமாகி விட்டால், அரசாங்கம் அவர்களின் கட்டுப்பாட்டில் போய்விடும். அங்கே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நோக்கம் , அதாவது Missiin, Vision என்பதைப் பொறுத்தே எல்லாம் நடக்கும் என்பதால், மாற்றங்களை எளிதாக ஏற்றுக்கொள்ள செய்துவிட முடியாது. அப்படி செய்ய முயன்றவர்களை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
ஆம், John F Kennedy என்ற அமெரிக்க ஜனாதிபதி முதல் Water Gate Nixon வரை அந்த பீரோகிராடிக் கும்பல் மாற்றத்தை விரும்பாமல் சதி செய்து கொன்று விட்டது. சமீபத்தில் அந்த Bureaucracy க்கு எதிராக காய்களை நகர்த்திய Donald Trump என்பவரும் வீழ்த்தப்பட்டார் என்பதை கொஞ்சம் திரும்பி, வேறு பார்வையோடு, புதிய கோணத்தில் பார்த்தால் மட்டுமே இது புரியும்.
எனவே இரண்டில் ஒன்று மட்டும் சரியல்ல, இரண்டும் சேர்ந்தது தான் சரி என்று சொல்லலாம். அந்த இரண்டையும் இணைத்து ஒரு ஒழுக்கம் சார்ந்த கட்டமைப்பு தேவைப்படுகிறது. அதைத்தான் அடிப்படை அமைப்பாக இந்து மதம் தனிமனித ஒழுக்கத்தை போதிப்பதன் மூலம் இரண்டையும் பேலன்ஸ் செய்தது, நல்வழிப்படுத்தியது. அதனால்தான் இந்தியாவின் பாரம்பரியம் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு நிலைத்து நின்றது.