கில்லியாய் சொல்லி அடிக்கும் இந்திய நிறுவனங்கள்!!!
என்ன வேணும் - எப்படி இருக்கணும் என்கிற வரைமுறையை மட்டும் முடிவு செய்து தெளிவாய் எங்களுக்கு கொடுங்க....
ஓரிரு வருடங்களில் உண்டாக்கி கொடுக்கிறோம் என பாதுகாப்புதுறையில்..... தனியார் நிறுவனங்கள் செய்யும் புரட்சி மெய் சிலிர்க்க வைக்கிறது!!! அம்பானியோ அதானியோ இல்லை.... முதல் தலைமுறை தொழில் நிறுவனங்கள்!!!!
அப்படிதான் தற்போது உள்நாட்டு தயாரிப்பு அர்ஜுன் MK1பீரங்கிக்கு தேவையான "Fibre Optical Video stabilizing camera"வை முதன்முதலாய் செய்து கொடுத்துள்ளது Tanbo நிறுவனம். gimbleயும் தூக்கி சாப்பிடும் தொழில்நுட்பம்.
பாதுகாப்பு துறை தொழில்நுட்பம் என்றாலே 10 மடங்கு விலையில் இஸ்ரேலையோ - அமெரிக்காவையோ தேடி போகும் காலமும் மெல்ல மாறுகிறது!!!.எதிரிகள் நம்மை பார்க்கும் முன் - நாம் அவர்களை பதம் பார்ப்பதற்கான அதி அற்புத படைப்பு இது!!!5 கி.மீ அப்பாலுள்ள முழு போர்களத்தையும் தானாய் படம் பிடித்து - இலக்குகளை தரம் பிரித்து தானாய் குறி வைக்கும் தொலைநோக்கி!!! நாம் உத்தரவு பட்டனை மட்டுமே அழுத்த வேண்டும்!!! கிட்டதட்ட வீடியோ கேம் விளையாடுவது போல் தான்!!!
அதாவது பீரங்கி எத்தனை குழுங்கினாலும் இந்த தொலைநோக்கி.... 4-5 கி.மீ தொலைவிலுள்ள காட்சிகளை படம் பிடித்து காட்டும் onboard screenல் ஒரு குழுங்கள் இருக்காது; எத்தனை கேமராக்கள் வைத்தாலும் அத்தனையையும் ஒன்று சேர்தது processசெய்து ஒத்த Screenல் கொண்டு வந்து விடும்.அந்த வீடியோவில் உள்ள அத்தனை டார்கட்டுகளையும் தானே track செய்து குறியும் வைக்கும் அளவுக்கு sensorம் உண்டு; வைத்த குறிஎந்த தொலைவில் உள்ளதென்று செ.மீ அளவில் துல்லியமாய் கண்டறிய Laser Finderம் உண்டு;
இரவிலும் காணும் வண்ணம் IRல் இயங்கும் தொழில்நுட்பமும் உண்டு; மொத்தத்தில் எதிரி எங்கு உள்ளார்கள் என்று மனிதன் தேடிய காலம் போய்.... இயந்திரமே தேடி குறியும் வைத்துவிடும்;30-40 டன் பீரங்கிகளையும் கிட்டதட்ட ஆளில்லாமல் இயங்கும் வண்ணம் செய்யும் தொழில்நுட்பம் மிக தொலைவில் இல்லை என்பதும் மட்டும் தெரிகிறது!!!
சரித்திரத்தில் நாம் என்றுமே போர் தொடுத்தவர்கள் அல்ல....அதேசமயம் நம் மீது தொடுக்க நினைப்பவர்களை நிலைகுலைய செய்ய ஆயுதமும் வேண்டும்!!! வலிமையாய் இல்லையேல் எளிமையாய் தொட்டு பார்க்க நினைப்பார்கள்!!!