உலகை திரும்பி பார்க்க வைத்த இந்திய ராணுவ சுபேதாரை தெரியுமா?
இந்திய ராணுவ சுபேதார் ஒருவர் உலக தடகளத்தில் 30 ஆண்டுகளாக யாரும் செய்யாத ஒரு அசுர சாதனையை செய்து, உலகின் கவனத்தை கவர்ந்துள்ளார்.
'ஸ்டீப்பில் சேஸ்' என்ற விளையாட்டு தெரியுமா? தடை தாண்டும் ஓட்டம் மாதிரியே தான். ஆனால் அந்த ஓட்டத்துடன் அதிக உயரம் கொண்ட தடைகளையும் தாண்டிக்கொண்டே 3000 மீட்டர் தூரமும் ஒடனும்.
இந்தியர்கள் என்னைக்குமே பெருசா இந்த டிராக் & ஃபீல்டு பகுதில ஜெயிக்கறது இல்லை, குறிப்பாக ஓட்ட பந்தயங்கள். அதுவும் இது மாதிரி தூரம் அதிகமாக இருக்கும் ஓட்ட பந்தய போட்டிகளில், கென்யா, எத்தியோப்பியா வீரர்கள் கிட்ட வழக்கமான ஓட்ட பந்தயங்களில் கில்லாடிகளான அமெரிக்கா, கனடா, ஜமைக்கா மாதிரி நாட்டுகாரங்க கூட நமக்கு எதுக்கு வம்புன்னு ஒதுங்கி போறது உண்டு.
இந்நிலையில் இப்போது நடந்த காமன்வெல்த் ஸ்டீப்பில் சேஸ் போட்டியில் மொத்தம் 9 பேர் பங்கேற்றனர். அதில் 3 பேர் கென்யா நாட்டுகாரங்க. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, இந்தியான்னு மற்ற ஆறு பேர். இதுல போட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே கென்யாக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என கமெண்ட்ரி தொடங்கியது. 4வதுல இருந்து 9வது எடத்துக்கு தான் போட்டின்னு கமெண்டரி கிண்டலுடன் ஆரம்பிக்குது.
ஏன்னா, கென்யா நாட்டுக்காரங்க பண்ணி வச்சு இருக்கற ரெக்கார்டு அந்த மாதிரி. கடந்த 30 வருஷமா கென்யா தவிர வேற எந்த நாடும் ஸ்டீப்பில் சேஸ்ல மெடல் வாங்கவே முடியல. தங்கம், வெள்ளி, வெண்கலம்ல கென்யான்னு பேர் அடிச்சிட்டு தான் போட்டியே ஆரம்பிச்சு இருக்காங்க. அந்த அளவுக்கு இந்த ஓட்டப்பந்தயத்தில கில்லி கென்யா.
இந்த ஆண்டு போட்டிகளிலும் அதே கதிதான், இவங்கள ஜெயிக்க யாரும் இல்லைன்னு சொல்லித்தான் போட்டி ஆரம்பித்தது. போட்டி தொடங்கிய 2வது நிமிஷத்துல 3 கென்யா வீரர்கள் பட்டைய கிளப்பிட்டு ஓட ஆரம்பிக்க, மத்த நாட்டு வீரர்கள் எல்லாம் கண்ணுக்கு எட்டின தூரத்துக்கு எங்கேயும் இல்லை...
ஆனா, ஒரே ஒரு வீரர் மட்டும் விடாம 4வது எடத்துல கென்யா வீரர்கள் பின்னாடியே ஒடிட்டு இருந்தார்..... அவர் தான் இந்தியாவோட அவினாஷ் சாப்லே.
கமெண்ட்டரில..... பராவயில்லை இந்தியாக்கு கப் அடிக்க வாய்ப்பு இல்லேன்னாலும், அவங்களுக்கு நேஷனல் பெஸ்ட் கெடைக்கும், இந்தியா வீரர் இப்படியே தாக்கு பிடிக்க முடிஞ்சா 4வது இடம் உறுதி, இந்தியர்களுக்கும் எப்போவுமே இந்த நெடுந்தூரம் ஓடும் பந்தையதில் ஜெயிச்சது இல்லை, 30 வருஷத்துக்கும் மேல கோல்ட், சில்வர், பிரான்ஸ் பதக்கங்களை கென்யா வீரர்களை தவிர வேறு யாருமே தொட்டது இல்லைன்னு சொல்லிட்டு சிரிச்சிட்டே இந்தியா வீரருக்கு மெடல் கெடைக்கணும்னா முன்னாடி ஓடிட்டு இருக்கற கென்யா வீரர்கள் யாருக்காவது ஏதாவது ஆனா தான் ஆச்சுன்னு கமெண்ட்ரி பேசிக்கிட்டே போக.....
அவினாஷ் சாப்லே மட்டும் விடாம 4வது எடத்துல ஓடிகிட்டே இருந்தார். கென்யா வீரர்களை நெருங்க கூட முடியல, எட்டி பிடிக்க முடியாத தூரத்துல முதல் கென்யாகாரர்கள் பறந்துட்டு இருக்க, விடாம ஓடிட்டு இருந்தார் நம் வீரர் அவினாஷ் சாப்லே....
கடைசி சில நூறு மீட்டர்கள் தான் இருக்கு, இன்னுமும் 3 கென்யா வீரர்கள் தான் முன்னாடி, ஒரு தடை மேல ஏறி எல்லோரும் குதிக்க அவங்க கூடவே அவினாஷ் சாப்லே காலும் இறங்கிச்சி, தமிழ் சினிமா ஹீரோ கடைசில எல்லோரையும் தாண்டி ஒடற மாதிரி, யாரும் எதிர்பார்க்காத நேரத்துல, அவினாஷ் சாப்லே ஒவ்வொரு கென்ய வீரர்களையும் தாண்ட ஆரம்பிக்க.....
முன்னாடி தங்க பதக்கத்துக்கு ஓடிட்டு இருந்த கென்ய வீரர், பதட்டத்துடன் 'யாரு நீ, எங்க இருந்து வந்தேன்'னு ஒரு நிமிஷம் திரும்பி பார்த்து ஓட, தங்கத்துக்கு குறி வச்சு ஓட ஆரம்பிச்சார் அவினாஷ் சாப்லே. கடுமையான போட்டி. கடைசி தடை தாண்டி ஓடும்போது இந்தியாவா கென்யாவா யாருக்கு கோல்டுன்னு மொத்த ஸ்டேடியமும் பத்திக்கிச்சு. கமெண்டரி சொல்லிட்டு இருந்தவங்க வாயடிச்சு போக. முதல் இடம் யாருக்கு என ஒட்டு மொத்த ஸ்டேடியமும் பிபி எகிறிப்போய் பதறி நிற்க....
கடைசியில் வெறும் 0.05 நொடிகள் வித்தியாசத்தில் கென்யா கோல்ட் அடிக்க, அவினாஷ் சாப்லே சில்வர் அடித்தார். போட்டியை நேரடியாக பார்த்த ஒட்டுமொத்த உலகமும் அவினாஷ் சாப்பே 0.05 நொடியில் தான் கோல்டை இழந்தார். அவருக்கும் கோல்ட் பெற முழு தகுதி இருக்கு என அவினாஷ் சாதனையை கை தட்டி ஆர்ப்பரித்து கொண்டாடியது.
30 வருஷமா எந்த நாட்டு வீரரும் சாதிக்க முடியாத, உடைக்க முடியாத இரும்பு கோட்டைய ஒடச்சது ஒரு இந்திய ராணுவ வீரர். ஆமா, அவினாஷ் சாப்லே இந்திய ராணுவத்தின் மகர் ரெஜிமெண்ட்ல சுபேதார் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்த 75வது சுதந்திரதின விழா கொண்டாட்டத்தில் இவருக்கும் நாமெல்லாம் சேர்ந்து ஒரு சல்யூட் அடிக்கலாம்.