பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் பெற்ற இந்தியா
2022-23 -ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் 7.2 சதவீதம் வளர்ச்சி பெற்று உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் 2022- 23ம் ஆண்டில் முதல் காலாண்டில் இந்தியா 6.1 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆண்டு சராசரி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சி உலக வங்கியின் கணிப்பை மீறி நடந்துள்ளது. 5.3 சதவீதம் வளர்ச்சியுடன் இந்தோனேசியா இரண்டாம் இடத்தையும், 4.1 சதவீத வளர்ச்சியுடன் பிரிட்டன் மூன்றாவது இடத்தையும், 3.1 சதவீத வளர்ச்சியுடன் சீனா நான்காவது இடத்தையும், 2.1 சதவீதம் வளர்ச்சியுடன் அமெரிக்கா ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.
இந்தியாவில் விவசாயத்துறை 5.5 சதவீதமும், கட்டுமானத்துறை 10.4 சதவீதமும், உற்பத்தித்துறை 4.3 சதவீதமும், வணிகம், ஓட்டல், போக்குவரத்துதுறை 9.1 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.3 லட்சம் டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. விரைவில் 5 லட்சம் டிரில்லியன் டாலர்களை எட்டும் வாய்ப்புகளுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டது.
எனவே இன்னும் ஒருசில ஆண்டுகளில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டு இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். பிரதமர் மோடியின் அயராத உழைப்பே, இதற்கு காரணம் எனவும் உலக நாடுகளின் பொருளாதார நிபுணர்கள் பாராட்டி உள்ளனர். இந்தியாவின் வளர்ச்சி கொரோனா, உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு தடங்கள்களை கடந்து சீராக உள்ளதாக இந்தியாவின் பொருளதார ஆலோசகர் ஆனந்தநாகேஸ்வரன் கூறியுள்ளார்.