ஆதிக்க நாடுகளை கட்டுக்குள் கொண்டுவரும் இந்தியா..!
மோடி கல்பாக்கம் வந்து சென்றது நம்மில் பலருக்கும் தெரியாமல் போனது தான் மிகவும் வருத்தமானது.;
உலகத்தில் வளர்ந்த நாடுகள் தங்களது மின்சார தேவைக்கு பயன்படுத்துவது நியூக்ளியர் எனர்ஜி. அது விலை குறைவானது. அது தரும் மின்சாரம் மிக அதிகம். எனவே இந்தியாவும் வல்லரசு ஆக வேண்டும் என்றால் நியூக்ளியர் எனர்ஜிக்கு செல்ல வேண்டும்.
அதற்கு பெரியளவில் பயன்படுத்தப்படுவது யுரேனியம். அதை நாம் தடையற்று வாங்க வேண்டும் என்றால், அதற்கு நாம் NSG (Nuclear Supplier Group) சேர்ந்தால் தான் அதை கொடுப்பார்கள். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
யுரேனியத்தில் நாம் மின்சார தேவைக்குப் பயன்படுத்திய பின் நமக்கு கிடைப்பது புளூட்டோனியம் என்ற உபரி. ஆனால் அது தான் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தும் மூலப்பொருள். அப்படியென்றால், அதை நாம் நமது அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். ஏன் மற்றவர்களுக்கு கூட கொடுக்க முடியும்.
அதனால் நாம் கஜகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கனடா போன்ற நாடுகளிடம் இருந்து யுரேனியம் வாங்குகிறோம். அதை பயன்படுத்திய பின்னர் புளூட்டோனியத்தை அவர்களுக்கு (NPT நாடுகள்) திருப்பி கொடுக்க வேண்டும். அதை கொடுக்கவும், திரும்ப பெறவும் நம்மிடம் மிகப்பெரிய பணம் வாங்குவார்கள்.
அதை நாமே வைத்துக்கொள வேண்டுமெனில், நாம் NPT (non-Prolifration of Nueclear Weapons) என்று சொல்லப்படும் அணு ஆயுதங்களை நாம் துறக்க வேண்டும். மேலும் எந்த அணு ஆயுத சோதனைகளையும் செய்யக்கூடாது. அப்படி செய்யாததால், நம்மால் தங்கு தடையற்ற யுரேனியத்தை வாங்க முடியவில்லை. அதனால் நாம் நியூக்ளியர் ரியாக்டர் மின் உற்பத்திக்கு அணு மின் நிலையங்களை கட்ட முடியவில்லை.
வாஜ்பாய் அணு ஆயுத சோதனையை செய்து முடித்த பின்னர், நமக்கு யாரும் யுரேனியம் கொடுக்கக்கூடாது என்று தடுத்து விட்டார்கள். அதனால் பின்பு வந்த சோனியா அரசாங்கத்திற்கு பல கட்டளைகளை போட்டார்கள். அதில் நாம் ராக்கெட் சோதனை செய்யக்கூடாது. சென்சிடிவான ஆராய்ச்சிகள் செய்யக்கூடாது என்று பல கீழ்படிதலுக்கு பின்பு நம் முன்னாள் பிரதமர் யுரேனியத்தை பெற முடிந்தது. நம் தேஜஸ் விமான தயாரிப்பு முதல், விமானம் தாங்கி கப்பல்கள் வரை நிறுத்தப்பட்டது.
அதாவது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது. வாங்கினால் தடை போடுவோம் என்ற கட்டளை போலத்தான். அப்போது பலமில்லாத தலைமை நாட்டை ஆண்டதால், அவர்கள் கட்டளைக்கு அடிபணிந்தது. ஆனால் இன்று நமது பிரதமர் மோடி, முடிந்தால் தடை செய்துபார் என்றார். நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாங்கள் வாங்குவது ரஷ்ய ஆயில் என்றால் யூரோ யூனியன் வாங்குவது என்ன தக்காளி சட்டினியா என்று அமெரிக்க மண்ணிலேயே கேட்டு அவர்களின் ரெட்டை வேஷத்தை அசிங்கப்படுத்தினார்.
அது போன்ற தடைகள் என்பது தவிர்க்க முடியாதது. அதற்கு மாறாக தோரியம் என்ற பொருளை அணு மின் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். உலகில் இருக்கும் தோரியம் இருப்பில் 25% நம்மிடம் தான் உள்ளது. அதை வைத்து நம்மால் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தினால் யாரையும் இந்தியா சார்ந்திருக்க வேண்டியதில்லை.
அதற்காக நமது அணுசக்தி தந்தை ஹோமி பாபா 1954 ல் யுரேனியத்திற்கு பதிலாக தோரியத்தை பயன்படுத்தலாம் என்று சொன்னார். ஆனால் அதற்குரிய டெக்னாலஜி நமக்கு கிடைக்கவில்லை என்பதை விட அதற்குரிய ஆராய்ச்சிக்கான டெக்னாலஜியை நமக்கு US, Euro நாடுகள் தடுத்து விட்டது. அதை நம்மால் மட்டுமல்ல, உலகில் எந்த நாடும் செய்யவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ரஷ்யா அதை வெற்றிகரமாக செய்து முடித்தது. அதை நாமும் இப்போது செய்து முடித்துள்ளோம். எனவே நாம் இனிமேல் மேலை நாடுகளை யுரேனியத்துக்காக சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை, பயன்படுத்திய பின் அவர்களுக்கு புளூட்டோனியத்தை கணக்கு காட்ட வேண்டியதில்லை.
அதைதான் நமது கல்ப்பாக்கம் அணு மின் உலையில் வெற்றிகரமாக செய்துள்ளார்கள். மோடி அதை தொடக்க வந்தார். அப்படியெனில் அது உலக சாதனை, ஆனால் ஏன் நமக்கு தெரியவில்லை. அதைப்பற்றிய புரிதல் என்பது மிகவும் சிக்கலானது. ஆனால் எளிதாக பார்த்து புரிந்து கொண்டால், நாமும் அணு அறிவியல் விஞ்ஞானியே.
அதற்கு முன்பாக அணு பற்றி ஒரு அடிப்படை புரிதல் தேவை. ஒரு அணுவை பிளந்து அதில் உள்ள ஒரு எலக்ட்ரானை வெளியேற்றினால், அப்போது மிக அதிக அளவில் வெப்பம் உருவாகும். அதை நாம் நீரை கொதிக்க வைத்து, டர்பைன் மூலம் இயக்கி மின்சாரம் தயாரிக்கிறோம். அதற்கு பெயர் ஃபிஸன் (Fission) என்பதாகும்.
உதாரணமாக ஒரு யுரேனியம் தாதுவில் 92 புரோட்டான்களும், 146 எலக்ட்ரான்களும் இருக்கிறது. அதை இரண்டையும் சேர்த்தால் (92+146=238) வருகிறதல்லவா, அதனால் தான் அதை யுரேனியம் 238 என சொல்கிறோம்.
அதில் நாம் ஒரு புரோட்டானை அதனுள் செலுத்தும் போது அது யுரேனியம் 239 ஆக மாறும் அப்போது பெருமளவில் வெப்பம் உருவாகும். அங்கே புரோட்டான், எலக்ட்ரான் சமனாக இல்லாததால் அது ஒரு புரோட்டானை 23 நிமிடங்கள் கழித்து உள்வாங்கி அது நெப்டூனியம் என்று மாறும். அப்போது அதுனுள் 93 புரோட்டான்களும், 146 நியூட்ரான்ங்களும் இருக்கும்.
அதிலிருந்து மேலும் ஒரு எலெக்ட்ரானை Fission மூலம் வெளியேற்றினால், 94 புரோட்டான்கள், 145 நியூட்ரான்களை கொண்ட புளூட்டோனியமாக மாறும். இந்த புளூட்டோனியம் தான் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தும் மூலப்பொருள்.
இப்போது அடுத்த Fusion டெக்னாலஜியை பற்றி பார்க்கலாம். சென்ற முறையில் ஒரு எலக்ட்ரானை வெளியே எடுக்கும் போது அங்கே பெருமளவில் வெப்பம் உருவாகும் என்று பார்த்தோம். அதற்கு நேர்மாறான டெக்னாலஜி தான் இந்த ஃபிஸைல் டெக்னலாஜி.
இதில் ஒரு எலெக்ட்ரானை வெளியேறுவதற்கு பதிலாக, ஒரு எலெக்ட்ரானை கூடுதலாக சேர்ப்போம். அப்போதும் அதே போல பெருமளவில் வெப்பம் உருவாகும். அதன் மூலம் கிடைக்கும் வெப்பத்தை வைத்து, நாம் மின்சாரம் பெற முடியும். ஆனால் பிரிப்பதை விட சேர்ப்பது என்பது மிக கடினமான வேலை.
எனவே அதை செய்ய அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலகில் பல நாடுகள் பல வருடங்களாக முயற்சிகள் செய்து வந்தன. இந்தியாவும் பெருமளவில் முயற்சி செய்தது. அதாவது நமது அணு விஞ்ஞானத்தின் தந்தை என்ற ஹோமிபாபா, அதை 1954 ல் முன் வைத்தார்.
ஏன் இந்தியா இதற்கு முயற்சித்தது என்றால், நம் நாட்டில் தோரியம் 232 என்பது பெருமளவில் கிடைக்கிறது. அதை பயன்படுத்தி மற்ற நாடுகளை யுரேனியத்திற்காக சார்ந்திருக்காமல் நமது இயற்கை வளத்தையே பயன்படுத்த முடியும் என்பதால் தான்,
ஆனால் அதை இதற்கு முன் இருந்த அரசாங்கங்களால் செய்ய முடியவில்லை. அந்த நிலையில் ஹோமிபாபா மர்மமாக கொலை செய்யப்பட்டார். அவரின் இறப்பும் லால் பக்தூர் சாஸ்திரி இறப்பு போல மூடி மறைக்கப்பட்டது. தோரியத்தில் இருக்கும் 232 மூலக்கூறுகளில் 90 புரோட்டான்களும், 142 எலெக்ட்ரான்களும் (90+142=232) இருக்கிறது. அதில் ஃப்யூஸன் (Fusion) டெக்னாலஜி மூலம் ஒரு எலக்ட்ரானை சேர்க்கும் போது அது யுரேனியம் 233 ஆக மாறுகிறது.
இந்த Fusion Technology யைத்தான் நமது இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக கண்டுபிடித்து, அதை கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் Fast Breader மூலம் வெற்றிகரமாக சேர்த்துள்ளார்கள். இதன் வெற்றி கண்காணிக்கப்பட்டு, பின்பு மற்ற அணு உலைகளுக்கும் விரிவாக்கி அதை தரம் உயர்த்தப்போகிறார்கள். அணு உலைக்கும், அணு ஆயுதத்திற்கும் என்ன வித்தியாசம்?
இந்த அணுக்களை பிளப்பதோ, அல்லது சேர்ப்பதோ கட்டுப்பாடாக நடந்தால் அது அணு உலை. அதுவே திறந்த வெளியில் கட்டுப்பாடு இல்லாமல் வெடிக்க அனுமதித்தால் அதுவே அணு ஆயுதம். இதற்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?
இந்திய விஞ்ஞானிகள் உலகளவில் சென்று மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை செய்யும் போது, இந்தியாவில் மட்டும் ஏன் செய்ய முடியவில்லை? காரணம், நம் நாட்டை ஆண்டவர்கள் மேலை நாடுகளுக்கு பயந்து கொண்டு இருந்தார்கள். இப்போது நேர்மையான, தலைவர் மோடி இருபதால் தான் கோவிட்டுக்கு தடுப்பூசி முதல் தோரியம் அணு மின் விசை வரை கண்டுபிடிக்க முடிந்தது. இனிமேல் பாருங்கள்... இந்தியாவின் சொந்த அணுதொழில்நுட்பம் காரணமாக ஆதிக்க சக்திகள் அனைத்தும் பாரத நாட்டின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.