போர்ச்சூழலை சந்திக்க முழுமையாக தயாராகிறது இந்தியா

சீனா, பாக்கிஸ்தான் இரு நாடுகளும் ஒரே நேரத்தில் போர் தொடுத்தாலும் சந்திக்க தயாராகிறது இந்தியா.;

Update: 2023-04-20 16:15 GMT

பைல் படம்.

உலகமே மெச்சும் வெளியுறவுத்துறை அமைச்சர் நமது ஜெய்சங்கர்சுப்பிரமணியம். ஒட்டுமொத்த உலக விவகாரத்தையும் விரல் நுனியில் வைத்துள்ளார். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒருமுறை இல்லை...பலமுறை வெளிப்படையாக கூறிய வார்த்தை, இந்திய- சீன உறவு சீர்கெட்டு கிடக்கிறது. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்பது தான். ஜெய்சங்கர் சுப்பிரமணியம் அவ்வளவு சுலபமாக வார்த்தைகளை உதிர்ப்பவர் இல்லை.

மிகுந்த நேர்த்தியான அதிகாரியாக இருந்தவர். இப்போது வெளியுறவுத்துறை அமைச்சராகி அசத்தி வருகிறார். பிரதமர் மோடியின் மிகுந்த நம்பிக்கை பெற்ற முன்னோடி அமைச்சர்களில் முக்கியமானவர். இவர் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை வருகிறது என்றால் நிச்சயம் இந்திய- சீன எல்லை நிலவரம் கவலை தரும் விஷயம் தான். சீனா எப்போதும் தனியாக போருக்கு வராது. தன்னுடன் பாக்கிஸ்தானையும் இணைத்து இந்தியா மீது போர்தொடுக்கவே திட்டமிடும்.

அப்படி ஒரு சூழல் வந்தால் சந்திக்க இந்தியா பல ஆண்டுகளாகவே தயாராகி வருகிறது. அதுவும் பிரதமர் மோடி பாக்., சீனா விவகாரத்தில் துளியளவும் பின்வாங்க மாட்டார். இதனால் இவர் தனது ஆட்சிக்காலம் முழுக்க திட்டமிட்டு இந்திய முப்படைகளின் பலத்தை அதிகரித்து வருகிறார். மோடியின் திட்டமிடல்களை கண்டு ஒட்டுமொத்த உலகமே வியந்து நிற்கிறது. ஏன் சீனாவே மிரண்டு போய் தற்போதய நிலையில், தயக்கத்துடன் பின்வாங்கி நிற்கிறது.

இருப்பினும் இந்தியா தன் உஷார் நிலையில் இருந்து துளியளவும் மாறவில்லை. எல்லைப்பகுதியில் முப்படைகளுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது ஜம்மு & காஷ்மீர் - மற்றும் லே லடாக்கை இணைக்க.....₹1.4 இலட்சம் கோடி செலவில் - 31Tunnel என All weather சாலை வேலைகள் படு அமர்க்களமாய் நடந்து வருகிறது. 2026 என்பது அரசின் கடைசி தேதி - ஆனால் 2025லேயே முடித்துக்கொடுப்பதாக கண்ட்ராக்டர்கள் உறுதி கொடுத்துள்ளனர். மறுபக்கம் இரயில்வே இணைப்பும் செல்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

31 Tunnelலில்.... ஒன்று மட்டும்(Zozilla Tunnel) 14 கிமீ நீளத்துக்கு அமைய உள்ளது - அதுவும் இரு வழி பாதையாக (போக வர என தனி தனியாக) - இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே இதுதான் மிக நீளமான Bipolar Tunnelஆக இது இருக்கும்!!! இது சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய சாதனையாகவும் இருக்கும் என்கிறார்கள் பொறியாளர்கள்!!! இத்தனை உயரத்தில் இப்படியொரு All weather tunnelஐ இந்தியா இதுவரை அமைத்தது இல்லை - முதல் முயற்சிலேயே உள்ளூர் ஒப்பந்ததாரர்களை வைத்தே சாதிக்க போகிறோம்.

இதுவரை வருடத்தில் பாதிநாள் - காஷ்மீர் & லடாக்கிற்கு போகும் பாதை மூடப்படும்.... பனிப்புயல் - மலை சரிவுனு பல காரணங்களால். அப்பெல்லாம் இலகுரக ஹெலிகாப்டர்கள் மட்டுமே ராணுவத்துக்கு பொருட்களை கொண்டு செல்லும்.... அதனாலேயே பாக்கும் 1999ல் கார்கிலை பிடித்து காஷ்மீரை & லடாக்கை இந்தியாவிலிருந்து துண்டிக்க முயன்றது.

அதேபோல் போரால் இறந்த இராணுவ வீரர்களை விட....... இந்த கரடு முரடான சவால் நிறைந்த குறைந்த அகலம் கொண்ட இந்த பாதையில் இராணுவ வாகனங்களில் செல்லும் போது - விபத்தில் இறந்தவர்களே அதிகம்.

இவை இரண்டுக்கும் தீர்வாகவே இந்த ₹45 ஆயிரம் கோடி சாலை திட்டம். வருடம் 365 நாளும் போகும் வகையிலும் - பயண தொலைவையும் நேரத்தையும் இரு மடங்காக குறைக்கும் வகையிலும்!!! அதாவது Srinagar-Kargil-Leh (NH1) பாதையில் அமைய போகும் Zojilla Tunnel மட்டும்..... Sonamarg to Minamarg இடையே கடக்கும் தூரத்தை 4 மணி நேரத்தில் இருந்து 40 நிமிடமாக மாற்றுகிறது - பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்கிறது!!! உடலுக்கு எப்படி இரத்த நாளங்களோ அப்படிதான் தேசத்துக்கு சாலைகள்!!!

இத்தனை காலமும் தரமான சாலைகள் இல்லாமல் போனது தான்..... காஷ்மீர் - லடாக் - வடகிழக்கு பிரதேசங்கள் என அனைத்திலும் வளர்ச்சிகள் முடங்கி போய் - ஆயுதம் ஏந்தும் போராட்ட குழுக்கள் அதிகமாகி - நாட்டின் வளர்ச்சியையே முடக்கி போட்டது. இப்போது இந்தியாவில் புதிய இரத்தம் பாய்ந்து புத்துணர்ச்சியோடு இந்தியா வளர்கிறது.

Tags:    

Similar News