விண்வெளி ஆய்வில் புதிய இலக்கை எட்டிய இந்தியா..!
இந்தியா தன் விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்லை தொட்டிருக்கின்றது
இந்திய வான்வெளி கழகமும் இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு உலக கவனத்தை பெற்றுள்ளது. அதாவது இதுவரை விண்வெளி ஓடங்கள் அல்லது வானுக்கு சாட்டிலைட்டை ஏவும் வாகனமெல்லாம் பெரும்பாலும் ஒருவழி பாதையில் தான் செல்லும். திரும்ப வராது.
அதாவது வானுக்கு செயற்கை கோளை எடுத்து செல்லும் ராக்கெட் செயற்கை கோளை விண்வெளியில் நிறுத்திவிட்டு தானே அழிந்து போகும், விமானம் போல திரும்பி வராது. முன்பு அமெரிக்காவிடம் வான்வெளிக்கு வீரர்களை ஏற்றி செல்லும் ஓடம் ராக்கெட்டை விட்டு பிரிந்து வான்வெளி ஆய்வுகளை முடித்தபின் விமானம் போல இறங்கும் நுட்பத்துடன் இருந்தது, அனால் அது அடிக்கடி விபத்தானது, கல்பனா சாவ்லா போன்றோர் அப்படி பலியாகிவிட இந்த வாகனம் நிறுத்தப்பட்டது.
இப்பொழுதுள்ள நுட்பபடி வானுக்கு செல்வது எல்லமே ஒருவழிபயணம் திரும்பி வரும் பயணிகள் வேறு வகையில் வந்து கடலில் பலூன் போன்ற பொதியில் விழுவார்கள். கப்பல் அவர்களை ஏற்றி கரை சேர்க்கும். பயணிகள் ராக்கெட் இப்படிஎன்றால், செயற்கைகோளை ஏற்றி செல்லும் ராக்கெட் எல்லாமே முழுக்க ஒருவழிபாதை மட்டுமே என்ற நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில்தான், இந்தியா இருவழி ராக்கெட் வாகன சோதனையினை கர்நாடகாவில் பெங்களூரு அருகே வெற்றிகரமாக சோதித்ததாக அறிவித்திருக்கின்றது. இது மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாவும் அறிவிக்கபட்டது. இத்தகு சூழலில், இனிமேல் விண்வெளி வீரர்களுக்கான ஓடம் மற்றும் செயற்கைகோள் ஏவலில் புதிய திருப்பமாக இந்நிகழ்வு கருதப்படுவதுடன், உலகின் விண்வெளி பந்தயத்தில் இந்தியா மிக முக்கிய இடத்தை அடையும். இப்படி இருவழி பயன்பாட்டு ராக்கெட்டுகளை இந்தியா தயாரிக்குமானால், அதன்பிறகு இந்திய விண்வெளித்துறை மாபெரும் உச்சத்தை அடையும். குறைந்த செலவில் செயற்கைகோள் ஏவும் நாடு எனும் பெருமையினை பெற்று நிற்கும்.
இந்தியாவின் திரும்ப திரும்ப பயன்படுத்தும் ராக்கெட் வெற்றி என்பது உலக அரங்கில் தேசத்தின் பெருமையினை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. நாட்டின் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் மிக அரிதான சாதனையினை செய்த விஞஞானிகளையும் தேசம் வாழ்த்தி பாராட்டுகின்றது