அக்னி 5 ரக ஏவுகணையா..ஹைப்பர்சோனிக் ஏவுகணையா..?

இந்தியாவில் சோதனை செய்யப்பட்டது அக்னி 5 ஏவுகணையா அல்லது ஹைபர்சானிக் ஆயுதமா என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார்கள்.

Update: 2022-12-20 00:45 GMT

பைல் படம்

இந்தியாவில் சோதனை செய்யப்பட்டது அக்னி 5 ஏவுகணையா அல்லது ஹைபர்சானிக் ஆயுதமா என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார்கள். இதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான்

ஒடிஷாவின் கடற்கரையிலே இருந்து தெற்காக ஏவப்பட்ட ஏவுகணை எப்படி நம்மூரிலே இந்த பக்கம் ராஞ்சியிலே இருந்து வடகிழக்கு மாநிலங்கள், மியான்மார் வரைக்கும் தெரிந்தது என்பது தான். நேரா தெற்கு பக்கம் போய் விழறது தானே வழக்கம் இது என்ன புதுசா இந்தப்பக்கம் ஒரு 700 கிலோ மீட்டர் வர்றதுன்னு. அதோட புகைவரும் வழி அதன் அமைப்பை வைச்சு சீன டிஎப் சீஎப் எனும் ஏவுகணை போல் இருக்கிறதுன்னு சொல்றாங்க.

இன்னமும் நம்முடைய டிஆர் டிஓ அமைப்பு எதையும் விளக்கவில்லை.ஹைபர்சானிக் அப்படீன்னா ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகத்திற்கு அதிகமான வேகம் என பொருள். அதற்கு குறைவாக ஆனால் ஒலியின் வேகத்தை விட அதிகமாக இருப்பதற்கு பெயர் சூப்பர்சானிக்.

இதை மேக் எண் எனும் எண்ணை வைத்து கண்டுபிடிப்பார்கள். பறக்கும் பொருளின் வேகத்தை ஒலியின் வேகத்தால் வகுத்தால் கிடைப்பது மேக் எண்.அது 5க்கு மேல் இருந்தால் அது ஹைபர் சானிக். ஹைபர் சானிக் ஏவுகணை அல்லது தாக்குதல் ஆயுதம் என்பது அமெரிக்கா, சீனா, ரஷ்யா எனும் மூன்று நாடுகளிடம் மட்டுமே இருக்கிறது. இந்த மூன்று நாடுகளும் ஏவுகணை, தானியங்கி வழுக்கல் ஆயுதம் எனும் இரண்டையும் வைத்திருக்கிறார்கள். சீனா இருப்பதாக சொல்கீறது ஆனால் இல்லை எனவும் சொல்கிறார்கள்.

இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்டது அக்னி5 ஏவுகணை அல்ல ஹைபர்சானிக் ஆயுதம் என உறுதியானால் நான்காவது நாடாக நாம் இருப்போம். ஆயுத தயாரிப்பிலே இது முக்கியமான இடம். ஏனென்றால் இதை தயாரிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்திலே போகும்போது காற்றின் உராய்வு விசையாலே வெப்பம் உண்டாகும். அந்த வெப்பம் இரும்பையே உருக்கும் அளவை விட அதிகமாக இருக்கும்.

அப்போது அதற்கு ஏற்றபடி வெப்ப தடுப்பு பூச்சுக்கள் இருக்க வேண்டும். இல்லையேல் ஆயுதம் சில விநாடிகளிலேயே உருகிவிடும். இதை தாண்டி அந்த வேகத்திலே போவதற்கு தேவையான எரிபொருள் நிரப்பபட்டிருக்கவேண்டும்.இதற்கு என்ன செய்வார்கள் என்றால் ஆக்சிஜனை காற்றிலேஇருந்து உறிஞ்சி உள்ளே இருக்கும் எரிபொருளோடு சேர்த்து எரியும்படி செய்வார்கள். இதற்கு ஸ்கேரம்ஜெட் என பெயர். இதனால் வித்தியாசம் என கேட்கிறீர்களா?

காற்றிலே வழுக்கி செல்லும் முறையால் எதிரி நாட்டு ரேடார்களால் கண்டுபிடிப்பது இயலாத காரியம். ஆனால் மற்ற ஏவுகணைளை எளிதிலே கண்டறிய முடியும்.மற்ற ஏவுகணைகளை போலில்லாமல் தடம் மாற்றி கூட தாக்குதல் நடத்த முடியும். அதாவது ஏவுகணை பறந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டு அறையிலே உக்கார்ந்து கொண்டு அதை ஒரு விமானம் போல இயக்கி தாக்க முடியும்.

அல்லது உள்ளே கணினி செயல்பாடுகளுக்கு உத்தரவு போடமுடியும். ரஷ்யா இந்த தாக்குதல் ஆயுதத்தை பயன்படுத்தித்தான் யுக்ரேனிலே அமெரிக்க ஏவுகணைக்குக்கு தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறது. சீனா தன்னிடம்தான்  பல நவீன ஆயுதங்கள் இருக்கின்றன, இந்தியாவின் ஏவுகணை தடுப்பு முறை வேலை செய்யாது என்று நினைத்து க்கொண்டிருந்தது. ஆனால்  இந்தியா சீனாவுக்கு  பாடம் புகட்டும் வகையில் டிசம்பர் 9 இல் ஏவப்பட்ட அக்னி ஏவுகணை அமைந்தது. இந்த  ஹைபர்சானிக் என்ஜின் சோதனை  வெற்றி என டிஆர்டிஓ அறிவித்தது. அதை ஏவுகணையிலே பொருத்தி சோதனை செய்தார்களா அல்லது ஏவுகணையிலே பொருத்திவிட்டு பின்னர் என்ஜின் சோதனை வெற்றி என சொன்னார்களா என்பது பாதுகாப்பு ரகசியம்.

இந்த இடத்திலே இன்னொன்றும் சொல்கிறார்கள். அக்னி5 இன் ஏவுகணை சோதனை தூரம் சொல்லப்பட்டதை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு இருக்கும்.  வெளியே பிரச்னை வராமல் இருக்க வெறுமனே 5000-8000 கிலோமீட்டர் என சொல்கிறார்கள் என. சரி அப்படீன்னா அமெரிக்க, சீன உளவுத்துறைகள் இதை கண்டுபிடித்து இருக்க வேண்டுமே?இருக்கும் தான். ஆனால் இந்தியா சாதித்துவிட்டது என அவங்களே ஒப்புக்கொண்டு விளம்பரம் கொடுப்பாங்களா என்ன? எது எப்படி இருப்பினும், இது மோடியின் புதிய இந்தியா. எல்லா ஏவுகணைகளையும் தயாரிக்கும் இந்தியா. எதிரிகளை சொல்லி அடிக்கும் வல்லமை கொண்ட  இந்தியா .

Tags:    

Similar News