இலங்கை திரிகோணமலையை கைப்பற்றுமா இந்தியா ?

இலங்கை திரிகோணமலை இயற்கையான துறைமுகங்களில் ஒன்று ஆகும்.

Update: 2022-10-05 04:00 GMT

பைல் படம் 

இலங்கை இதனை அமெரிக்காவிற்கு விற்பனை செய்ய துடித்தது. இந்திய ராஜதந்திர நடவடிக்கைகளினால் அது முறியடிக்கப்பட்டது. இப்பிரச்னை தற்போது வேறு வடிவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

திரிகோணமலையில் உள்ள திரிகோணேஸ்வரர் கோயில் 3157 வருடம் பழமையானது. தமிழக சோழ தேசத்துடன் ஒட்டி உறவாடிய இடங்களில் இதுவும் ஒன்று. கேந்திர முக்கியத்துவமான இந்த இடத்தினை கைப்பற்ற இந்தியா துடிக்கிறது என இலங்கையில் தகவல் பரவி வருகிறது.

இலங்கை வாழ் தமிழர்களில் மலையக மக்கள் தனியாகவும். மிஷனரி கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்கள் தனி அணியாகவும் தங்களுக்குள்ளேயே பிரிந்து நிற்கின்றனர். இரண்டு தரப்பு கிறிஸ்தவர்களும் தங்களுக்குள் யார் மூத்தவர். முன்னவர் என்றெல்லாம் அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த இடத்தில் இவர்கள் தற்போது காலங்காலமாக இருந்து வரும் திருகோணமலை திரிகோணேஸ்வர் திருக்கோயில் நிலங்கள் சார்ந்த பிரச்னையில் மூக்கை நுழைத்து வேடிக்கை காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

நேரிடையாக இதை தொடாமல் துறைமுகம் என்கிற போர்வையில்,  இந்திய அரசு தரப்பில் அதானி குழுமத்தை கொண்டு வந்து இந்த இடத்தை ஆக்ரமிக்க முயலுவதாக கதை கட்டி விட பிரயத்தனங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே இதே போன்று தான் இந்திய- ஜப்பான் கூட்டு முயற்சியில் இறங்கி ஈடுபட்டு வந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பிடுங்கி சீனாவிடம் பறி கொடுத்தனர். மீண்டும் அதே விதமான காய் நகர்த்தலை இலங்கை ஆளும் தரப்பில் மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க பெருநிறுவனங்களை சேர்ந்த சிலரை இதில் உள்ளே நுழைக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

இலங்கையின் கிழக்கில் இயற்கையான முறையில் உருவான இந்த துறைமுகத்தின் ஊடாக இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வேலைகளில் இங்கு  தமிழகத்தில் உள்ள சிலருமே ஈடுபட்டிருக்கின்றனர். இங்கு இருந்த துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவராக ஒருவரை பிடித்து அமர்த்தி விட்டு, பின்னணியில் கனகச்சிதமாக வேறோர் காய் நகர்த்தலை செய்ய சிலர் முயற்சிக்கின்றனர். அப்படி தலைவர்  பொறுப்பில் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்து இருப்பதும் நம் தமிழகத்தில் உள்ள நபரைத்தான் என்ற தகவலும் உலா வருகிறது.

இந்திய மார்க்கெட்டை போதைப்பொருள் விற்பனை சந்தையாக மாற்றவும், உலக அளவில் போதைப்பொருட்களை கடத்தி விற்கவும் இந்த திரிகோணமலையினை பயன்படுத்த உள்ளனர்.ஆளும் இந்திய அரசை நம்மவர்கள் சிலரே தங்கள் நலனுக்காக வீழ்த்த விலை போக துடிக்கிறார்கள். கூடிய விரைவில் இதற்கு முடிவு கட்டும் வேலைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இந்திய அரசின் நடவடிக்கைகள் மிகவும் ரகசியாகவே இருந்து வருகிறது.

Tags:    

Similar News