கிராமங்களில் கோழி வளர்ப்பு அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் கோழி வளர்ப்பு அதிகரிப் பால் மூங்கில் கூடை விற்பனையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

Update: 2023-12-05 02:45 GMT

பைல் படம்

தேனி மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ நாட்டுக்கோழி உயிருடன் கிலோ 550 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கோழி வளர்ப்பில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாட்டுக்கோழி வளர்ப்பு மிகவும் அதிகளவில் நடைபெற்று வருகிறது. நாட்டுக்கோழி வளர்ப்பவர்களுக்கு முக்கிய தேவை பஞ்சாரம் எனப்படும் மூங்கில் கூடை ஆகும்.

கடந்த சில மாதங்களாக இந்த கூடை முடையும் பணிகள் கூட முடங்கி கிடந்தது. காரணம் கூடைகளை வாங்க ஆள் இல்லை. தற்போது கிராமங்களில் பல்வேறு வழிகளில் மக்கள் சுய பொருளாதாரத்தை வளர்க்க முயற்சி செய்து வருகின்றனர். இதில் நாட்டுக்கோழி வளர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நாட்டுக்கோழிகளுக்கு மவுசு அதிகம் இருப்பதால், அதிகளவில் விற்பனை வசதிகளும் கிடைக்கிறது. நாட்டுக்கோழிகளை வளர்க்க பஞ்சாரம் எனப்படும் மூங்கில் கூடைகள் மிகவும் அவசியம். இதனால் விவசாயிகள் மூங்கில் கூடைகளை அதிகம் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் மாவட்டம் முழுவதும் மூங்கில் கூடைகள் விற்பனை நல்ல முறையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News