தேனி மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து பதிவாகி வருகிறது. இன்று 6 பேர் பாதிக்கப்பட்டனர்.;

Update: 2022-07-03 05:02 GMT

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான முடிவுகள் அடிப்படையில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80ஐ தொட்டுள்ளது. தற்போது பரவி வருவது ஒமிக்ரான் வகை கொரோனா என்பதால் பெரிய அளவில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிக்கல் ஏற்படவில்லை. ஆனால் தடுப்பூசி போடாதவர்களை ஒமிக்ரான் வகை தொற்று கூட கடுமையாக பாதிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News