முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் மிதமான மழைப்பொழிவு

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் மிதமான மழைப்பொழிவு மட்டுமே இருந்து வருகிறது.;

Update: 2022-07-03 04:59 GMT

முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் மிக, மிக லேசான மழைப்பொழிவு இருந்து வருகிறது. இன்று காலை 29.6 மி.மீ., தேக்கடியில் 28.2 மி.மீ., மட்டுமே மழை பெய்தது. தேனி அரண்மனைப்புதுாரில் 5.2 மி.மீ., கூடலூரில் 3.8 மி.மீ., வீரபாண்டியில் 2.8 மி.மீ., மழை மட்டுமே பதிவானது. இந்த மழைப்பொழிவால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கவில்லை. விநாடிக்கு 800 கனஅடி மட்டுமே நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர் மட்டம் 127.75 அடியாக உள்ளது. (மொத்த நீர் மட்ட உயரம் 152 அடி). வைகை அணை நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையில் 52.77 அடி நீர் மட்டுமே உள்ளது. (மொத்த நீர் மட்ட உயரம் 71 அடி). அணைக்கு விநாடிக்கு 572 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 800 கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News