வாரிசுரிமை வேலை குறித்த முக்கிய அறிவிப்பு வந்திருக்கு..!
அரசு வேலை செய்து கொண்டு இருக்கும் போது, ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு மரணித்தால், அவர்களது வேலை வாரிசுகளுக்கு வழங்கப்படும்.
அரசு வேலை செய்து கொண்டு இருக்கும் போது, ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு மரணித்தால், அவர்களது வேலை வாரிசுகளுக்கு வழங்கப்படும். இது வாரிசு வேலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த வாரிசு வேலைக்கு சில கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் உள்ளன. இது அனைவரும் அறிந்ததே. அதில் தற்போது சில மாற்றங்களை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதைப்பற்றி தான் இப்போது விரிவாக பார்க்கலாம்.
ஓய்வு பெறுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு செயல்பட முடியாத நிலையில் உள்ள ஊழியர்கள் அல்லது பணியின் போது இறந்த பணியாளர்களின் வேலைகள் அவர்களது வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்தன.
இந்த வேலைகள் பெரும்பாலும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் என்று வரையறுக்கப்பட்ட மனைவி, கணவன், மகன் அல்லது திருமணமாகாத மகள் ஆகியோருக்கு கருணை அடிப்படையில் கொடுக்கப்பட்டு வந்தது. பெரும்பாலும் இந்த வேலை கணவன் அல்லது மனைவிக்கு முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் அதை தவிர்க்கும் நேரத்தில் அவர்களது மகனுக்கு இந்த பணி சென்று சேரும். மகன் இல்லாத வீடுகளில் திருமணம் ஆகாத பெண் இருந்தால் அவருக்கு இந்த வாரிசுரிமை வேலை கிடைக்கும்.
ஒருவேளை திருமணம் ஆன பெண்ணாக இருந்தால் மற்ற உறவினர்கள் ஒப்புதலுடன் அவருக்கு வாரிசுரிமை வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை திருமணம் ஆகாத பெண் வேலை வாங்கினால் அவர் பிற்காலத்தில் திருமணம் ஆன பின்னரும் தனது பிறந்த வீட்டிற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு வேலை வழங்கப்படும்.
அப்படி வாரிசு உரிமை வேலை வாங்கிய பெண்களுக்கு திருமணம் ஆனால், அவரது கணவர் அந்த வேலையில் இருந்து கிடைக்கும் நிதியில் இருந்து ஒரு பங்கை அந்த பெண்ணின் வீட்டிற்கு கொடுக்க அனுமதிக்க வேண்டும். அதற்கான நிபந்தனையில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவை எல்லாமே கருணையின் அடிப்படையில் இறந்தவர்கள் குடும்பம் நீதி பற்றாக்குறையால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வழங்கப்பட்டு வருகின்றன.
புது விதிமுறைகள் என்ன?
ஓய்வு பெற ஐந்து ஆண்டுகளுக்கு முன் நோய்வாய் பட்டு அல்லது பணியின் போது இறந்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு வந்த வாரிசு உரிமை வேலையை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் இறந்து போனாலும் அவர்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட வேண்டும் என்று நீட்டிக்கப்பட்டுள்ளது
காவல்துறை தலைமையகத்தில் இருந்து வந்த சமீபத்திய சுற்றறிக்கை படி, பணியின் போது இறந்த போலீஸ் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீசார் இறந்திருந்தாலும் அவர்களது வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் காணாமல் போன போலீஸ்காரர், ஓய்வு பெறும் தேதிக்கு முன் இறந்து விட்டார் என தகவல் கிடைத்து, அதை நீதிமன்றம் உறுதி செய்திருந்தால், அவரின் வாரிசுகளும் கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கருணை அடிப்படையில் பணி வழங்கும் போது சீனியாரிட்டி பட்டியல் பின்பற்றப்படுகிறது கருணை அடிப்படையில் கூறும் போது காலியிடம் இருந்தால் துறை தலைவர்கள் 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும் என்பது விதி. உரிய காலியிடம் இல்லை என்றால் மூன்று மாதங்களில் இது குறித்து ஆட்சியரிடம் பரிந்துரைக்க வேண்டும்.