தெருவில் குப்பை எடுத்தால் ரூ.500 உடனடி பரிசு: கம்பம் கவுன்சிலர் அதிரடி

Today Theni News - எனது வார்டில் தெருவில் ஒரு குப்பை எடுத்தாலும் அவர்களுக்கு ரூ.500 பரிசு வழங்கப்படும் என கம்பம் 11வது வார்டு கவுன்சிலர் சாதிக் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

Update: 2022-06-24 03:09 GMT

கம்பம் கவுன்சிலர் சாதிக்.

Today Theni News - தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் 11வது வார்டில் கவுன்சிலராக இருப்பவர் சாதிக், 40. இவர் தனது வார்டில் குப்பை சேகரிப்பு மேலாண்மை பணியினை சிறப்பாக செய்து வருகிறார்.

கழிவுநீர் தேக்காமல் சாக்கடையினை துார்வாறுதல், மரக்கன்றுகள் நடுதல், பூங்காக்கள் அமைத்தல் என பொது இடங்களை சுத்தப்படுத்தி பல்வேறு பணிகளை செய்து வருகிறார். அவர் கூறியதாவது: எனது வார்டில் 85 சதவீதம் முஸ்லிம் மக்களும் 15 சதவீதம் இதர மக்களும் வசிக்கின்றனர். நான் வீடு, வீடாக சென்று மக்களிடம் தெருவில் குப்பை போடாதீர்கள். துப்புரவு பணியாளர்கள் வந்து சேகரித்துக் கொள்வார்கள் என அறிவுறுத்தினேன். அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

எனது வார்டில் யாரும் தெருவில் குப்பை கொட்டுவதில்லை. துப்புரவு பணியாளர்களும் காலை, மாலை இருவேளை குப்பை சேகரித்து தெருக்களையும் கூட்டி சுத்தம் செய்கின்றனர். அவர்களின் பணி சிறப்பாக உள்ளது. எனவே எனது வார்டில் உள்ள தெருக்களில் ஒரு சிறிய குப்பையினை கூட பார்க்க முடியாது. அப்படி யாராவது குப்பை எடுத்தால் நான் அவர்களுக்கு அந்த இடத்திலேயே 500 ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளேன். இவ்வளவு துணிச்சலாக நான் அறிவிக்க வார்டு மக்களும், துப்புரவு பணியாளர்களும் எனக்கு தரும் ஆதரவு தான் காரணம். இவ்வாறு கூறினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News