முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாகி விடும்

முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று விவசாய சங்க நிர்வாகி கவலை தெரிவித்தார்.

Update: 2021-11-14 12:02 GMT

ஐந்து மாவட்ட விவசாய சங்கங்களின் ஓருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.

முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசினை ஒரு போதும் நாங்கள் நம்பவே மாட்டோம். அணையினை பாதுகாக்கவும், உரிமைகளை மீட்கவும் எங்களின் வலுவான போராட்டங்கள் தொடர்ந்து நடக்கும். முல்லை பெரியாறு அணை நீரினை நம்பி தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கரில் பாசனம் நடக்கிறது. ஒரு கோடி விவசாயிகள் இந்த நீரினை நம்பி உள்ளனர்.

முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். கேரளா முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என கனவு கண்டு வருகிறது.

புதிய அணை கட்ட குறைந்தது 25 ஆண்டுகள் ஆகும். அதற்குள் தமிழகத்தில் இந்த ஐந்து மாவட்டங்களும் பாலைவனமாகி விடும். எனவே புதிய அணை கேரளாவின் கனவாகவே முடிந்து விடும். இவ்வாறு கூறியுள்ளாார்.

Tags:    

Similar News