வண்ணான் படித்துறை, மீன் மார்க்கெட் அமைத்து தருவேன்: அதிமுக வேட்பாளர் ஷீலா உறுதி

தேனி நகராட்சியில் வண்ணான்படித்துறையும், மீன் மார்க்கெட்டும் கட்டித்தருவேன் என 29து வார்டு அதிமுக வேட்பாளர் ஷீலா உறுதி.

Update: 2022-02-16 01:11 GMT

தேனி 29வது வார்டில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆசிரியை ஷீலா ஓட்டு சேகரித்தார்.

தேனி நகராட்சி 29வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஷீலா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்த வார்டுக்கு உட்பட்ட கொட்டகுடி ஆற்றின் அருகே வண்ணான்படித்துறை கேட்டு இப்பகுதி மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர். தவிர நகரின் மையப்பகுதியான இங்கு, மீன் மார்க்கெட் வேண்டும் எனவும் மக்கள் பல ஆண்டுகளாக கேட்டு வருகின்றனர்.

இந்த இரண்டு திட்டங்களும் இதுவரை கிடப்பிலேயே உள்ளன. 29வது வார்டில் ஓட்டுக் கேட்டு சென்ற ஆசிரியை ஷீலாவிடம் பொதுமக்கள் இந்த கோரிக்கைகளை முன் வைத்து நினைவூட்டினர். அவர் செய்து தருவதாக உறுதி அளித்து இரட்டை இலை  சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்.

Tags:    

Similar News