4 ஆண்டு பிரிந்து வாழ்ந்த மனைவி: மனம் உடைந்த கணவர் தற்கொலை
போடி அருகே, மனைவி பிரிந்து வாழ்ந்ததால் மனம் உடைந்த வாலிபர், தற்கொலை செய்து கொண்டார்.;
போடி, போயன்துறை ரோட்டில் வசித்தவர் பிரபு, 32. விவசாயம் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி ராஜேஸ்வரி தொடர்ந்து 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தார். பலமுறை சமரசம் செய்து மனைவி கணவனுடன் வாழ ஒப்புக்கொள்ள மறுத்தார்.
இதனால் மனம் உடைந்த பிரபு, விஷம் குடித்தார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.