கணவன் குடும்பத்தார் கொடுமை; ஏழு மாத கர்ப்பிணி தீக்குளிக்க முயற்சி

தேனியில் தன் கணவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக கலெக்டர் அலுவலகம் முன்பு ஏழு மாத கர்ப்பிணி தீக்குளிக்க முயற்சி.

Update: 2021-08-25 14:00 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற 7 மாத கர்ப்பிணி பெண் முருகேஸ்வரி.

தன் காதல் கணவனுடன் சேர்ந்து வாழ விடாமல் அவரது குடும்பத்தினர் கொடுமை செய்வதாகவும், ஏழு மாத கர்ப்பிணியான தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும் புகார் கூறி, இன்று மாலை தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஏழு மாத கர்ப்பிணி தீக்குளிக்க முயன்றார்.

தேனி மாவட்டம் கூடலுாரை சேர்ந்தவர் முருகேஸ்வரி 25. இவர் கோகிலாபுரத்தை சேர்ந்த சுதாகர் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் தன் கணவர் தன் மீது அதிக பாசம் வைத்திருப்பதாகவும், ஆனால் கணவரின் தாய், தந்தை, அக்கா உட்பட உறவினர்கள் கர்ப்பிணி என்றும் பாராமல் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், கணவனுடன் வாழ விடாமல் வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும், உத்தமபாளையம் மகளிர் போலீசில் சொல்லியும் எந்த பலனும் இல்லை என்றும் தேனி கலெக்டர் அலுவலகத்தில் வந்து புகார் கொடுத்தார்.

புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த போலீசார் முருகேஸ்வரியை மீட்டு தேனி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News