கணவன் கொடுமை தாங்காமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
கணவன் கொடுமை தாங்காமல் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், வருஷநாடு காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஜெமினி. இவரது மனைவி ராதிகா( வயது 34). இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஜெமினி குடிபோதையில் தன் மனைவியை கொடுமைப்படுத்துவது வழக்கம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தன் மனைவியை காலால் நெஞ்சில் மிதித்துள்ளார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மனைவி வீடு திரும்பி உள்ளார்.
இந்நிலையில் மீண்டும் கணவன் கொடுமைப்படுத்தவே, மனம் உடைந்த ராதிகா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வருஷநாடு போலீசார் ராதிகாவின் மரணத்திற்கு காரணமான ஜெமினியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.