மனைவிகள் பிரிந்த சோகத்தில் கணவன் துாக்கிட்டு தற்கொலை

தனது இரண்டு மனைவிகளுமே தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனம் உடைந்த கணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-19 12:49 GMT

தேனி மாவட்டம், வருஷநாடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன், 39. இவர் தேனியை சேர்ந்த சசினாதேவி என்பவரை 16 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்தார்.

இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் சசினாதேவி கணவரை பிரிந்து சென்று விட்டார். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பவளக்கொடி என்பவரை திருமணம் செய்தார். ஈஸ்வரன் மது அருந்தி விட்டு தகராறு செய்ததால் பவளக்கொடியும் கணவனை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மனம் உடைந்த ஈஸ்வரன், இரண்டு திருமணம் செய்தும், இருவருமே தன்னை பிரிந்து விட்டார்களே என விரக்தியில் புலம்பிக் கொண்டு தனியே வாழ்ந்துள்ளார். இன்று காலை திடீரென வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். வருஷநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News