குடிப்பழக்கத்தை நிறுத்த மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை
தேனி அருகே குடிப்பழக்கத்தை நிறுத்த மனைவி கண்டித்ததால் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பரத், 27. இவரது மனைவி அர்ச்சனாதேவி, 27. இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. பரத் குடிப்பழக்தகதிற்கு அடிமையாகி உள்ளார்.
இந்நிலையில் குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த பரத் வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.