தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம்

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-09-01 09:13 GMT

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் நிர்வாகிகள் தலைமையேற்று நடந்துவந்தனர்.

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் தொடங்கிய இந்த ஊர்வலம் பெரியகுளம் ரோடு, நேரு சிலை சந்திப்பு, மதுரை ரோடு வழியாக அரண்மனைப்புதுார் விலக்கு வந்தது. மொத்தம் 157 சிலைகள் ஊர்வலத்தில் பங்கேற்றன.ஊர்வலத்தின் முன்  தெய்வங்களின் வேடமிட்டு இளைஞர்கள் ஆடி வந்தனர். குயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், செண்டமேளம், முளைப்பயிர், தொடர்ந்து விநாயகர் ஊர்வலம் நடந்தது.

இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட தலைவர் ராமராஜ், நிறுவனத்தலைவர் பொன்.ரவி, மாவட்ட பொருளாளரும், யோகா ஆசிரியருமான செந்தில்குமார் , மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மற்றும் இராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் சோலைராஜன்,  மாவட்ட மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள், ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி கமிட்டி பொறுப்பாளர்கள், இந்து எழுச்சி ஆட்டோ முன்னணி பொறுப்பாளர்கள் ஆட்டோ முன்னணி பொறுப்பாளர்கள் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags:    

Similar News