தேனியில் மரக்கன்றுகளை நட இந்து எழுச்சி முன்னணி முடிவு
தேனியில் நெடுஞ்சாலைத்துறை வெட்டிய மரங்களுக்கு ஈடாக மரங்களை நட்டு வளர்க்க இந்து எழுச்சி முன்னணி முடிவு செய்துள்ளது.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் வாரவழிபாட்டு கூட்டம் நடந்தது. நகர அமைப்பாளர் முத்துராஜ் ஜீ தலைமை தாங்கினார். நகர செயலாளர் கனகுபாண்டி ஜீ முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஒரு சில வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக அதை சரி செய்ய முன்வர வேண்டும்.
தேனி நகரம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறையால் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நட முன்வர வேண்டும். தவறும் பட்சத்தில் இந்து எழுச்சி முன்னணி மரக்கன்றுகளை நடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் (3): நடந்து முடிந்த ஸ்ரீவிநாயகர்சதுர்த்தி ஊர்வலத்திற்கு உறுதுணையாக இருந்த பொறுப்பாளர்களுக்கும், கமிட்டி உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் இந்து எழுச்சி முன்னணி தெரியப்படுத்திக்கொள்கிறது. என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.