இந்து எழுச்சி முன்னணி தேனியில் அன்னதானம்

தேனி வேதபுரி ஆசிரமம் மற்றும் இந்து எழுச்சி முன்னணி சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2022-04-29 10:17 GMT

இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் - சத்திரப்பட்டி சாலையில் வேதபுரி ஆசிரமம் அமைந்துள்ளது. கடந்த திங்கள்கிழமை அன்று இந்த ஆசிரமத்தில் உள்ள திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது .இந்த கும்பாபிஷேக விழாவில் தேனி மாவட்டம் மட்டும் அல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கும்பாபிஷேக விழா அன்னதான நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்று (29 4- 2 -022) தேனி பொம்மையகவுண்டன்பட்டி மேலஓடைத்தெருவில் உள்ள பட்டாளத்தம்மன் திருக்கோவில் முன்பாக வேதபுரி ஆசிரமம் நிறுவனத்தின் சார்பில் இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் சிறப்பு அன்னதான திட்டத்தினை வழங்கி சிறப்பித்தனர். இந்த சிறப்பு அன்னதானத்தில் பொம்மைய கவுண்டன்பட்டி, அல்லிநகரம், ரத்தினம்நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த அன்னதானத்தில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் ,மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்ஜி,நகர அமைப்பாளர் சிவராமன் ஜி நகர செயலாளர்கள் சிவானந்தம், எஸ் எஸ் ராஜன் மற்றும் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Tags:    

Similar News