வங்கி கணக்கு தொடங்க முடியாமல் பரிதவிக்கும் மலைக்கிராம மக்கள்
போடி அருகே உள்ள கொட்டகுடி மலைக்கிராம மக்கள் வங்கி கணக்கு தொடங்க உதவி கேட்டு கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர்.;
வங்கி கணக்கு தொடங்க உதவி கேட்டு கொட்டகுடி மலைக்கிராம பொதுமக்கள் தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கொட்டகுடி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் கொழுக்குமலை. இங்கு வசிக்கும் முப்பத்தி ஐந்து குடும்பத்தினர் போடியில் வங்கி கணக்கு தொடங்க முயற்சித்து வருகின்றனர். மலைக்கிராம மக்கள் என்பதால், கணக்கு தொடங்க தேவையான சில ஆவணங்களை கொடுக்க முடியவில்லை. இதனால் வங்கி கணக்கு தொடங்காமல், அரசு வழங்கும் திட்டம் எதையும் பெற முடியவில்லை. இப்படி பல்வேறு வழிகளில் அவதிப்பட்ட மக்கள் தங்களுக்கு வங்கி கணக்கு தொடங்க உதவி செய்யுமாறு கேட்டு கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர். கலெக்டர் உதவி செய்வதாக உறுதி அளித்தார்.