தேனி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.;

Update: 2022-06-21 09:16 GMT

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை துணைத்தலைவர் கணேஷ், மாவட்ட அளவில் பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவனுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

தேனி முத்துதேவன்பட்டியில் இயங்கி வரும் மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை மெட்ரிக் குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவன் பி.மிருத்யூன்ஜெய் பிளஸ் 2 தேர்வில் 594 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் வாங்கி சிறப்பிடம் பெற்ற மாணவனாக திகழ்கிறார். இவருக்கும், பள்ளி அளவில் 2ம் இடம் பிடித்த எஸ். தன்யா 584 ,கே. கீர்த்தனா 584 , சி. கிருஷ்ண பிரியா 584 மற்றும் மூன்றாம் இடம் பிடித்த எஸ்.அபிஷேக் பிரபு 583, பி.காயத்ரி 583 மாணவ மாணவியர் களையும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற எஸ்.எஸ்.தர்ஷினி 493, ஆர். சாருமதி 493 , இரண்டாம் இடம் பிடித்த எஸ்.எஸ்.சக்தி வருனிஷா 488,ஏதமிழ் வதனி 488, மூன்றாம் இடம் பிடித்த ஆர்.ஹரிணி 487 ஆகிய மாணவியர்களுக்கும் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை தலைவர் டி.ராஜமோகன் துணைத்தலைவர் பி.பி. கணேஷ் அனைத்து கல்வி நிறுவனங்களின் பொதுச் செயலாளர் எம்.எம்.ஆனந்தவேல்  பொருளாளர் எம். பழனியப்பன் ஆகியோர் வாழ்த்தி பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். பள்ளி செயலாளர் பாலசரவணகுமார்  பள்ளி இணைச்செயலாளர்  ஏ.எஸ்.ஜி.டி.அருண்குமார்  பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியர் ஆசிரியைகள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி இணைச்செயலாளர் கே.வன்னியராஜன்  நன்றி கூறினார்.

Tags:    

Similar News