தேனி மாவட்டத்தில் கொட்டுது மழை: வைகையில் 4300 கனஅடி நீர் திறப்பு

Theni Vaigai Dam - தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.;

Update: 2022-09-01 03:40 GMT

தேனி மாவட்டம், வைகை அணையில் இருந்து ஆற்றில் விநாடிக்கு நாலாயிரத்து முந்நுாறு கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

Theni Vaigai Dam -தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்துள்ளது. சராசரியை விட இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகம் தான். இன்று காலை 6 மணி நிலரவப்படி ஆண்டிபட்டியில் 62 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 16.4 மி.மீ., போடியில் 24.6 மி.மீ., பெரியாறு அணையில் 17.2 மி.மீ., தேக்கடியில் 19.2 மி.மீ., உத்தமபாளையம், வைகை அணையில் தலா 17 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது. இந்த மழையால் வைகை அணைக்கு விநாடிக்கு 4600 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணை நீர் மட்டம் 70.01 அடியாக உள்ள நிலையில் (முழுமையாக நிரம்பிய நிலை) அணையில் இருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 4300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 136.40 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News