கனமழை எச்சரிக்கை: ஆக 10 வரை மலைப்பயணங்களை விவசாயிகள் தவிர்க்க அறிவுரை
ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி வரை பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மலைப்பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது;
பைல் படம்
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து (நாளையில் இருந்து) வரும் 10ம் தேதி வரை பலத்த காற்றுடன் மழை பெய்யும். எனவே வாழை விவசாயிகள், தென்னை விவசாயிகள் இதர விவசாயிகள் இந்த காற்று, மழையை எதிர்கொண்டு பயிர்களை பாதுகாக்க தயாராக இருக்க வேண்டும்.
அதேபோல் இந்த 10 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தேனி, திண்டுக்கல், ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி, வால்பாறை, கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பல்லடம், காங்கேயம், திருப்பூர் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும். அதற்கு ஏற்ப விவசாயிகளும், பொதுமக்களும் வாழ்வியல் முறைகளை திட்டமிட வேண்டும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.