தேனியில் கொட்டித்தீர்த்த மழை... அணைகளுக்கு நீர் வரத்து உயர்வு

Heavy Rain Today - தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

Update: 2022-09-06 03:30 GMT

பைல் படம்.

Heavy Rain Today -தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்துக்கட்டி வருகிறது என்றே கூறலாம். அந்த அளவு இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி தேனி அரண்மனைப்புதுாரில் 26.4 மி.மீ., ஆண்டிபட்டியில் 3.2 மி.மீ., போடியில் 12.2 மி.மீ., கூடலுாரில் 1.6 மி.மீ., பெரியகுளத்தில் 69 மி.மீ., பெரியாறு அணையில் 26 மி.மீ., தேக்கடியில் 28.8 மி.மீ., சோத்துப்பாறையில் 30 மி.மீ., உத்தமபாளையம், வைகை அணை, வீரபாண்டியில் தலா 4 மி.மீ., வரை மழை பதிவாகி உள்ளது.

இந்த மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து இதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் மட்டம் 70 அடியாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது. மொத்த நீர் மட்ட உயரம் 71 அடியாகும்.

முல்லைப்பெரியாறு அணைக்கு விநாடிக்கு 2500 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 137 அடியாக உள்ளது. அதேபோல் சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, சண்முகாநதி அணைகளும் நிரம்பி வழிகின்றன.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News