தேனி மாவட்டத்தில் பலத்த மழை: வைகைக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கன அடி
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.;
தேனி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிபட்டியில் 41.4 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 45.6 மி.மீ.,போடியில் 32.2 மி.மீ., கூடலுாரில் 52.7 மி.மீ., மஞ்சளாறில் 48 மி.மீ., பெரியகுளத்தில் 58 மி.மீ., பெரியாறு அணையில் 29.8 மி.மீ., தேக்கடியில் 38 மி.மீ., சோத்துப்பாறையில் 29 மி.மீ., உத்தமபாளையத்தில் 50.3 மி.மீ., வைகை அணையில் 48 மி.மீ., வீரபாண்டியில் 78.6 மி.மீ., மழை பதிவானது.
இந்த மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியை எட்டியுள்ளது. அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர் மட்டம் 69.65 அடியாக உள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 3623 கனஅடியாக உள்ளது. 2300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் மட்டம் 141.65 அடியாக உள்ளது.
அதேபோல் மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணைகளிலும் நீர் நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் உபரி நீர் முழுக்க வெளியேற்றப்பட்டு வருகிறது.