தேனி மாவட்டம் முழுவதும் பலத்த மழை, மின்சாரம் துண்டிப்பு

தேனி மாவட்டத்தில் இரவு முழுக்க பலத்த மழை பெய்தது. மழையால் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

Update: 2024-10-23 04:07 GMT

தேனி மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுக்க தேனி மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாக காணப்பட்டது. இரவு 8 மணிக்கு திடீரென மழை தொடங்கியது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. பின்னர் இரவு முழுவதும் சாரல் இருந்தது.

நேற்று இரவு தேனி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்: ஆண்டிபட்டி- 2.8 மி.மீ., தேனி அரண்மனைப்புதுார் 26.6 மி.மீ., வீரபாண்டி 10.2 மி.மீ., பெரியகுளம்- 42 மி.மீ., சோத்துப்பாறை- 8 மி.மீ., வைகை அணை 14.6 மி.மீ., போடி ஒரு மி.மீ., உத்தமபாளையம் 13.4 மி.மீ., கூடலுார் 4.8 மி.மீ., தேக்கடி 52 மி.மீ., சண்முகாநதி 3.6 மி.மீ., மழை பதிவானது.

மாவட்டம் முழுவதும் இன்று காலையில் லேசான வெயில் தென்படுகிறது. நேற்று இரவு பெய்த மழையால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தேனியில் பலமுறை சரி செய்யப்பட்டாலும், தொடர்ச்சியாக மின்தடை இருந்தது. இரவு 12.45 மணிக்கு மேல் தான் மின்தடை சீரானது. இதே நிலை தான் மாவட்டம் முழுவதும் இருந்தது. மின்வாரிய பணியாளர்கள் கொட்டும் மழையினை பாராமல் இரவு நேரத்திலும் மின்தடையினை சரி செய்தது, பொதுமக்களிடம் வரவேற்பினை பெற்றது.

Tags:    

Similar News