கம்பம் அருகே ரோட்டில் நின்று அறிவுரை மினிவேன் மோதி ஒருவர் உயிரிழப்பு

Today Accident News In Tamil- போக்குவரத்திற்கு இடையூறாக டிராக்டரை நிறுத்தியிருந்த நபருக்கு ரோட்டில் நின்று அறிவுரை வழங்கியவர் விபத்தில் உயிரிழந்தார்.;

Update: 2022-09-09 03:48 GMT

Today Accident News In Tamil- தேனி மாவட்டம் கூடலூர் பேச்சியம்மன் கோயி்ல் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 45.) இவர் கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். தனியார் பண்ணை அருகே செல்லும் போது, போக்குவரத்திற்கு இடையூறாக ஒரு டிராக்டர் நிறுத்தப்பட்டிருந்தது. ரோட்டில் நின்று சுந்தரம் அந்த டிராக்டர் டிரைவருக்கு அறிவுரை கூறினார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வேகமாக வந்த மினிலாரி சுந்தரம் மீது மோதியது. பலத்த காயமடைந்த சுந்தரம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். கூடலுார் போலீசார் டிராக்டர் டிரைவர் மாரியப்பன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News