இந்த சாலைகளில் பயணித்துள்ளீர்களா?

இருபுறமும் மரங்கள் அடர்ந்த நிழல் படர்ந்த சாலைகளில் பயணித்த சுகம் இப்போது உள்ள தலைமுறைக்கு கிடைக்காது;

Update: 2023-08-05 07:15 GMT

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து வைகை அணை செல்லும் ரோடு.

இப்போது ஒட்டுமொத்த இந்தியாவும் மாறிப்போய் விட்டது. உள்கட்டமைப்புகள் பெரிய அளவில் உருவாகி விட்டன. குறிப்பாக நான்கு வழிச்சாலைகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் பின்னிப்பிணைந்து விட்டன. நான்கு வழிச்சாலை அமைக்கும் போது, ஒரு மரம் அகற்றப்பட்டால், அதற்கு பதிலாக 10 மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம்,  உச்சநீதி மன்ற நீதிபதிகள் பலமுறை உத்தரவிட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது..

நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், உள்ளாட்சி அதிகாரிகளும் கூட கோர்ட் உத்தரவுகளை மதிக்கவில்லை. இதன் விளைவு உலகில் வளமான இந்திய நாட்டின் நான்கு வழிச்சாலைகளில், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, ஏதோ அரபு நாடுகளில், விவசாய நிலம் இல்லாத சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயணிப்பது போன்ற ஒரு வெறுமை உணர்வு தான் ஏற்படுகிறது.

மரங்கள் வெட்டப்பட்டதால் காற்றில் ஈரப்பதம் கடுமையாக குறைந்து விட்டது. ஆடி மாதம் கூட அனல் காற்று வீசுகிறது. ரோட்டோர மரங்களை இழந்ததன் விளைவுகளையும் சேர்த்தே நாம் அனுபவித்து வருகிறோம். இயற்கையை அழித்து அதன் மூலம் பெறும் வளர்ச்சி எவ்வளவு ஆபத்தானது என்பதையும் விரைவில் ஒட்டுமொத்த உலகமும் உணரத்தான் போகிறது. இருக்கட்டும்.

ஆறுதலுக்காக இப்போதும் தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் சாலையோர மரங்களுக்கு ஊடே செல்லும் சாலைகள்  இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றின் நீளம் தான் மிக, மிக குறைவு. இரண்டு  சாலைகளின் படங்களை பார்க்கவே எவ்வளவு ஆசையாக இருக்கிறது என்று. தேனி மாவட்டத்தின் சாலைகளின்  புரதான சின்னங்களாக இந்த இடங்கள் மாறி விட்டன. இதனை இப்போது பார்ப்பவர்கள் இன்னுமா இது போன்ற அருமையான சாலைகள் உள்ளன என்று பிரமித்துப் போகின்றனர்.

Tags:    

Similar News