ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லுாரி ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் போட்டி
உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது.;
உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான (Speed Roller Skating Competition) ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் உள்விளையாட்டு அரங்கிலும் மற்றும் கல்லூரி வளாகத்திலும் ஆண்களுக்கு ஆறு பிரிவுகளிலும் பெண்களுக்கு ஆறு பிரிவுகளிலும் தனித்தனியாக நடைபெற்றது.
இதில் தேனி , திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சார்ந்த கல்லூரிகளிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பாக நடைபெற்ற போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்தனர்.
இப்போட்டியின் தொடக்கமாக கல்லூரியின் தாலாளர் மற்றும் செயலர் ஹாஜி எம். தர்வேஷ் முகைதீன் மற்றும் கல்லூரி ஆட்சி மன்றக் குழு தலைவர் ஜனாப் எஸ். செந்தால் மீரான் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ஹாஜி எச். முகமது மீரான் மற்றும் கல்லூரி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் நிறுவனர் குடும்பத்தினர், முன்னாள் கல்லூரி முதல்வர்கள், முன்னாள் உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பா. அக்பர் அலி ஆகியோர் கலந்துகொண்டு போட்டியாளர்களை ஊக்குவித்து போட்டியை சிறப்பாக தொடங்கி வைத்தனர்.
விருவிருப்பாக நடைபெற்ற ஆடவர் பிரிவின் இறுதியில் ரோடு ரேஸ் -1 லேப் ஸ்பிரின்ட் போட்டியில் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவர் ஆர். ஜெய பாலாஜி முதலிடம் பிடித்தார். ரோடு ரேஸ் -100 மீட்டர் ஸ்பிரின்ட் போட்டியில் அமேரிக்கன் கல்லூரியை சேர்ந்த எஸ். ஆதிஷ் முதலிடம் வகிக்கித்தார்.
ரோடு ரேஸ்-10000 மீட்டர் பாயிண்ட் ரேஸ் போட்டியில் தியாகராசர் கல்லூரியைச் சார்ந்த மாணவர் சி. ராகுல் கண்ணன் முதலிடம் பிடித்தார். ட்ராக் ரேஸ்-500+டீ மீட்டர் போட்டியில் அமெரிக்கன் கல்லூரியைச் சார்ந்த டி.எஸ். தினேஷ் முதலிடத்தை பிடித்துள்ளார். ட்ராக் ரேஸ் -1000 மீட்டர் ஸ்பிரின்ட் போட்டியில் விவேகானந்தர் கல்லூரி மாணவர் எஸ்.காளிராஜ் முதலிடம் பிடித்தார். ட்ராக் ரேஸ் -10000 மீட்டர் பாயிண்ட்+எலிமிநேசன் போட்டியில் சுபலட்சுமி(லட்சுமி பட்டி) கல்லூரி மாணவர் எம். பால கணேஷ் முதலிடம் பிடித்தார்.
பெண்களுக்கான பிரிவில் ட்ராக் ரேஸ் -500+டீ மீட்டர் போட்டியில் ஸ்ரீ மீனாட்சி அரசு கலைக் கல்லூரி மாணவி ஏ.நாக ஸ்ரீ கிரண் முதலிடம் பிடித்தார். ட்ராக் ரேஸ் -1000 மீட்டர் ஸ்பிரின்ட் போட்டியில் வி.எச்.என்.எஸ்.என் கல்லூரி மாணவி என்.இந்துஜா முதலிடம் பிடித்தார். போட்டி நிறைவு பகுதியில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியின் தாலாளர் மற்றும் செயலர் ஹாஜி எம்.தர்வேஷ் முகைதீன் மற்றும் கல்லூரி ஆட்சி மன்றக் குழு தலைவர் ஜனாப் எஸ்.செந்தால் மீரான் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ஹாஜி எச்.முகமது மீரான் மற்றும் கல்லூரி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பா.அக்பர் அலி ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.