நிலக்கடலை விளைச்சல் : சாதனை படைத்த விவசாயி

ஆண்டிபட்டி விவசாயி ஒருவர் நிலக்கடலை சாகுபடியில் சாதனை படைத்துள்ளார்.;

Update: 2021-11-14 11:46 GMT

ஆண்டிபட்டியில் விளைந்த நிலக்கடலை செடி.

தேனி மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் நிலக்கடலை சாகுபடி நடைபெற்று வருகிறது. வழக்கமாக விவசாயிகள் ஒரு செடியில் அதிகபட்சம் 40 நிலக்கடலைகளை விளைவிப்பார்கள். இந்நிலையில் ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோயில் கிராமத்தில் உள்ள ஜெயராம் என்பவர் தனது தோட்டத்தில் பாக்ஸி 1812 ரக நிலக்கடலை விதைகளை சாகுபடி செய்தார்.

இந்த விதைகள் ஆந்திர மாநிலம் கதிரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்டது. சாகுபடி செய்து தற்போது நிலக்கடலை அறுவடை பருவத்தில் உள்ளது. ஒரு செடியில் 120 நிலக்கடலைகளுக்கும் அதிகமான கடலைகள் விளைந்துள்ளது. அதாவது மூன்று மடங்கு விளைச்சல் அதிகம் கிடைத்துள்ளது. இதனால் நிலக்கடலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News