தேனி மாவட்டத்தில் நிலக்கடலை சீசன் தொடக்கம்: ஒரு படி ரூ.30 க்கு விற்பனை

தேனி மாவட்டத்தில் நிலக்கடலை சீசன் தொடங்கி உள்ளது.;

Update: 2021-11-22 02:18 GMT

தோட்டத்தில் பறித்த நிலக்கடலையினை் ரோட்டோரத்தில் கழுவி உடனுக்குடன் விற்கும் விவசாயிகள்.

தேனி மாவட்டத்தில் நிலக்கடலை சீசன் தொடங்கியது. ஒரு படி நிலக்கடலை 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் அறுவடை தற்போது தொடங்கி உள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் பறித்த நிலக்கடலையினை முன்பு கமிஷன் கடைக்கு அனுப்பி விற்பனை செய்வார்கள்.

தற்போது நிலக்கடலையினை ரோட்டோரம் குவித்து வைத்து சாலையில் செல்பவர்களுக்கு நேரடியாக விற்பனை செய்கின்றனர். பறித்த உடனே கிடைத்த பச்சை நிலக்கடலை ஒரு படி (ஒரு கிலோ 250 கிராம் வரை இருக்கும். பருப்பின் திரட்சி, சத்துப்பிடிப்பை பொறுத்து எடை அளவு மாறும். இதனால் படிக்கணக்கில் விற்கின்றனர்.) 30 ரூபாய்க்கு விற்கின்றனர்.

காரில் செல்பவர்கள், இதர வாகனங்களில் செல்பவர்கள் குறைந்தது 4 படி, 5 படி என வாங்கிச் செல்கின்றனர். இதனால் பறித்த அன்றே நிலக்கடலை விற்பனையாகி விடுகிறது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News