நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.;
தேனி, மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு சொந்தமான நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்து நாடார் உறவின்முறை மற்றும் அனைத்து நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் தலைவர் முருகன், பொதுச்செயலாளர் டி.ராஜ்மோகன், பொருளாளர் பழனியப்பன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கல்லுாரி முதல்வர் பியூலா ராஜினி வரவேற்றார். கொடைக்கானல் அன்னை தெரஸா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் பட்டங்களை வழங்கினார். கல்லுாரி செயலாளர் தில்லைக்கனி, இணைச் செயலாளர் கனகராஜ் நன்றி கூறினர்.