விபத்து இழப்பீடு வழங்காததால் பெரியகுளத்தில் அரசு பஸ் ஜப்தி

விபத்துஇழப்பீடு வழங்காததால், பெரியகுளத்தில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2022-04-26 09:15 GMT

கோப்பு படம் 

பெரியகுளம் வடுகபட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார், 31. இவர் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஒட்டன்சத்திரத்தில் இருந்து பெரியகுளத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தார். அம்பிளிக்கை போலீஸ் ஸ்டேஷன் அருகே எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் இறந்தார்.

இவரது மனைவி மாரியம்மாள் கோவை மண்டல அரசு போக்குவரத்து டெப்போ மீது பெரியகுளம் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் 2016ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் ராஜ்குமார் குடும்பத்திற்கு 23 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

இந்த பணம் இதுவரை வழங்கப்படாததால், நீதிபதி சிங்கராஜ் அரசு பஸ்ஸை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். திருப்பூரில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ்ஸை, பெரியகுளம் டெப்போ முன்பு கோர்ட் அமீனா ரமேஷ் ஜப்தி செய்தார்.

Tags:    

Similar News