பெரியகுளத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் தொடங்க அரசு அனுமதி
பெரியகுளத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் தொடங்க அரசு அனுமதி கொடுத்துள்ளது.;
தேனி மாவட்டத்தில் தேனி, போடி, உத்தமபாளையம், ஆண்டிபட்டியில் மகளிர் ஸ்டேஷன்கள் உள்ளன. ஆனால் பெரியகுளத்தில் இதுவரை மகளிர் ஸ்டேஷன் இல்லை. இதனால் பெரியகுளம் மற்றும் சுற்றுக்கிராம பெண்கள் தேனிக்கு வர வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் தேனி ஸ்டேஷனில் பணிபுரிபவர்களுக்கும் பணிச்சுமை அதிகம் இருந்தது.
இந்த பிரச்னைகளை தீர்க்க பெரியகுளத்தில் தனியாக மகளிர் ஸ்டேஷன் தொடங்க வேண்டும் என தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகம் பரிந்துரை செய்திருந்தது. இதனை ஏற்று அரசு பெரியகுளத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க அனுமதி வழங்கி உள்ளது. தற்போது இடம் தேர்வு செய்யப்பட்டு, அதிகாரிகள், போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் இந்த ஸ்டேஷன் செயல்பட தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.