இந்திய ராணுவத்தின் பொன் மொழிகள்..!
இந்திய ராணுவத்தின் பொன்மொழிகள் என சமூக ஊடகங்களில் வந்த பதிவினை படித்ததும் மனதின் இயக்கம் சிறிது நேரம் நின்று போனது.
தேனி மாவட்டம் சின்னமனுாரை சேர்ந்த தேசியவாதி என்.பாஷ்யம் கூறியதாவது:
சமூக ஊடகங்களில் பல பதிவுகள் தினமும் உலா வருகின்றன. அதில் ஒன்றிரண்டு மனதை மிகவும் கவர்ந்து விடுகிறது. குறிப்பாக அந்த பதிவுகளை படித்ததும் மனம் பல மணி நேரம் அந்த பதிவில் அமர்ந்து வெளியேற மறுக்கிறது. அந்த அளவு மிகவும் நல்ல, தரமான பதிவுகளும் வரத்தான் செய்கின்றன. அப்படி சமீபத்தில் என்னை நிமிர வைத்த, என் மனதை கொள்ளையடித்த ஒரு பதிவினை நேட்டிவ் நியூஸ் வாசர்களிடம் சொல்ல வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. அதனை சொல்கிறேன்.
இந்திய முப்படைகளின் முன்னாள் ராணுவ தலைமை தளபதி (லேட்) விபின் ராவத் கூறியது போல் வந்துள்ளது அந்த பதிவு. இந்திய ராணுவத்தின் பொன்மொழிகள் என்ற தலைப்பில் வந்த பதிவு தான் அது.
1. உங்களுக்கு வாழ்நாளின் அசாதாரண சாகசம் என்னவோ... அதுவே, எங்களின் அன்றாட வாழ்க்கையாகிப்போனது. இந்த வாசகம் லே-லடாக் நெடுஞ்சாலையில், இந்திய ராணுவம் வைத்துள்ளது.
2. காற்று வீசுவதால் எங்கள் கொடி அதாவது இந்திய தேசியக் கொடி பறக்கவில்லை...தன் உயிரை தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரரின் இறுதி மூச்சுடன் தான் அது பறக்கிறது"
3. நான் மூவர்ண கொடியை 'ஏந்தி' கொண்டு...வருவேன் அல்லது மூவர்ண கொடியைப் 'போர்த்தி' கொண்டு வருவேன்... (இதனை படித்ததும் நெஞ்சம் நிறைந்து என்னை அறியாமல் கண்ணீர் ததும்பியது). ஆனால் கண்டிப்பாக வருவேன்"- கேப்டன் விக்ரம் பத்ரா, இறுதி வீர சக்கரா விருது பெற்றவர்.
4. என் வீரத்தை நிரூபிக்கும் முன் என் மரணம் வந்தால்...நான் மரணத்தைக் கொல்வேன்.. என்று சத்தியம் செய்கிறேன்" - கேப்டன் மனோஜ் குமார் பாண்டே. பரம் வீர் சக்ரா விருது பெற்றவர், (1/11 கோர்க்கா ரைபிள்ஸ்)
5. எங்களைப் பெற நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்... எங்களைப் பிடிக்க நீங்கள் கூர்மையாக இருக்க வேண்டும்... ஆனால்... எங்களை வெல்ல நீங்கள் குழந்தையாக இருக்க வேண்டும்- இந்திய ராணுவம்
6. கடவுளே! எங்கள் 'எதிரி கள்' மீது கருணை காட்டுங்கள்... ஏனென்றால், நாங்கள் அதனை அவர்களிடம் காட்ட மாட்டோம்" - இந்திய ராணுவம்
7. நம் வாழ்வு தற்செயல், நம் காதல் நம் விருப்பம், நாட்டை பாதுகாக்க, நாட்டிற்கு எதிரானவர்களை கொலை செய்வது நம் தொழில். - அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை
8. மரணத்திற்கு பயப்படவில்லை' என்று ஒருவர் கூறினால், அவர் ஒன்று பொய்யாக இருக்க வேண்டும்... அல்லது... அவர் இந்திய ராணுவத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்."- பீல்ட் மார்ஷல் சாம் மானெக்க்ஷா
9. பயங்கரவாதிகளை மன்னிப்பது கடவுளின் வேலை... அதற்கு, அவர்களை கடவுளை சந்திக்க வைப்பது எங்கள் வேலை."- இந்திய ராணுவம்
10. நம் நாட்டுக்கு கொடுக்க ஒரே ஒரு உயிர் மட்டுமே உள்ளதே' என்று வருந்துகிறோம்." - இந்திய ராணுவம். இப்படி ஒரு பதிவு தான் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது. இதனை படித்த தேசியவாதிகள் பலரும் வியந்து போய் என்னிடம் விவாதித்தார்கள். இந்த நல்ல விஷயத்தை நேட்டிவ்நியூஸ் வாசகர்களுக்காக வழங்குகிறோம். இவ்வாறு கூறினார்.