பொது மக்களுடன் சென்று தாசில்தாரிடம் மனு கொடுத்த எம்.எல்.ஏ
பெரியகுளம் தாலுகா அலுவலகத்திற்கு பொதுமக்களுடன் நேரில் சென்று எம்.எல்.ஏ. சரவணக்குமார் மனு கொடுத்தார்;
பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் பொதுமக்களுடன் பெரியகுளம் தாலுகா அலுவலகம் சென்று தாசில்தாரிடம் மனு கொடுத்தார்.
பெரியகுளம் கும்பக்கரை ரோட்டோரம் வசித்து வரும் 90 குடும்பங்களை சேர்ந்த மக்கள் ரோடு விரிவாக்க பணியால் வீடுகளை இழக்கும் நிலையில் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு மாற்று ஏற்பாடாக பெரியகுளம் முருகமலை அடிவாரத்தில் வீட்டி மனை இடங்கள் வழங்க வேண்டும் என பெரியகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமாரிடம் முறையிட்டனர். உடனே அவர்களை அழைத்துக் கொண்டு, பெரியகுளம் தாலுகா அலுவலகம் சென்றார். அங்கு தாசில்தாரிடம் பொதுமக்களின் கோரிக்கையினை மனுவாக கொடுத்து அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், தேனி லோக்சபா தொகுதி செயலாளர் தமிழ்வாணன், நிர்வாகிகள் தளபதி, கனிமனோகரன் உட்பட பலர் உடன் சென்றனர்.