வாய்ப்பு காெடுங்கள், மாற்றம் தாெடங்கட்டும்: தேனியில் பாஜக வேட்பாளர் அசத்தல்

தேனி நகராட்சி 15வது வார்டில் பாஜக மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் மோடியின் சாதனைகளை எடுத்துச் சொல்லி ஓட்டு கேட்டனர்.;

Update: 2022-02-14 01:41 GMT

தேனி நகராட்சி 15வது வார்டு பா.ஜ., வேட்பாளருக்கு அக்கட்சி மகளிர் அணியினர் வீடு, வீடாக ஓட்டு கேட்டனர்.

தேனி நகராட்சி 15வது வார்டில் பா.ஜ., வேட்பாளராக புவனேஸ்வரி தாமரை சின்னத்தில் களம் இறங்கி உள்ளார். இவரது தேர்தல் வாக்குறுதிகளே மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பா.ஜ., முக்கிய பிரமுகர்கள் இவருக்கு பெரும் ஆதரவு கொடுத்து தினமும் ஓட்டு கேட்டு வருகின்றனர். இன்று தேனி மாவட்ட செயலாளர் அமுதா திருச்செல்வன், தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியம்மாள் பகவதி, வர்த்தக அணி மாவட்ட தலைவர் சிவக்குமரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் ஓட்டு சேகரித்தனர்.

அப்போது வீடு, வீடாக பெண்களை அழைத்து பிரதமர் மோடியின் திட்டங்களை எடுத்துச் சொல்லி, அத்தனை திட்டங்களும் மக்களுக்கு முறையாக சென்று சேர தரமான உள்ளாட்சி பிரதிநிதிகள் தேவை. எனவே வார்டு கவுன்சில் தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து, பா.ஜ., கவுன்சிலருக்கு.. வாய்ப்பு கொடுத்து பாருங்கள். மாற்றம் உங்களிடம் இருந்தே தொடங்கட்டும் என்று பிரச்சாரம் செய்து ஓட்டு கேட்டனர். இந்த பிரச்சார வியூகம் பெண்களை மிகவும் கவர்ந்ததை நேரில் காண முடிந்தது.

Tags:    

Similar News