‘முழு ஒத்துழைப்பு கொடுங்க சார்’ - இந்து எழுச்சி முன்னனி தீர்மானம்

விநாயகர் சதுரத்தி விழாவிற்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் என இந்து எழுச்சி முன்னணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.;

Update: 2024-09-02 17:38 GMT

தேனியில் நடந்த இந்து எழுச்சி முன்னணி கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்து எழுச்சி முன்னணி சார்பில் பல ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா தேனி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவாக சிலை கரைப்பு ஊர்வலம் தொடங்கும் போது போலீஸ் நிர்வாகம் போட்ட சில கட்டுப்பாடுகளால் சில மணி நேரம் ஊர்வலம் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த ஆண்டும் அதேபோல் குழப்பம் ஏற்படுத்தி விட வேண்டாம். நாங்கள் முழுமையாக விதிமுறைகளை கடைபிடிக்கிறோம். நீங்களும் ஒத்துழைப்பு தாருங்கள் என இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தி  உள்ளது.

இந்து எழுச்சி முன்னணி தலைமை அலுவலகத்தில் வார வழிபாடு நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை வகித்தார். தேனி நகர செயலாளர் தினேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் (1)

டைகர் மீடியா தலைமை ஆசிரியரும் இந்து எழுச்சி முன்னணியின் தீவிர ஆதரவாளருமான கம்பம் ராஜ்குமார் மறைவிற்கு இந்து எழுச்சி முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது

தீர்மானம் (2 )

தேனி மாவட்டம் முழுவதும் இந்து எழுச்சி முன்னணி பேரியக்கத்தின் சார்பாக நடைபெறும் ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழாவினை அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதேபோல் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் இந்து எழுச்சி முன்னணி நடத்தும் விநாயகர் சதுர்த்திக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமாய் மாவட்ட இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News