தேனியில் நாளை முதல் 3 நாட்கள் எரிவாயு தகன மேடை மூடல்
தேனி எரிவாயு தகன மேடை நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி எரிவாயு தகன மேடை நாளை முதல் மூன்று நாட்கள் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் இறந்தவர்களின் உடல்களை விறகு மூலம் எரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான நடைமுறையில் எரிவாயு தகன மேடையில் உடல்களை எரிக்க ரூ.2,800 வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த மூன்று நாட்களும் விறகு பயன்படுத்தி எரிப்பதால், ஆம்புலன்ஸ் வாடகை உட்பட ஒரு உடலை எரிக்க ரூ.4500 வசூலிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் பராமரிப்பு பணி நடைபெறும்போது இது போன்ற சிரமம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க இன்னொரு எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.