ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் 84 கிலோ கஞ்சா பறிமுதல்
கம்பம் அருகே ஓடைப்பட்டியிலும், ராயப்பன்பட்டியிலும் 84 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.;
தேனி மாவட்டம், கம்பம் அருகே ராயப்பன்பட்டியில் ரோந்து சென்ற போலீசார் டூ வீலரில் வந்த இருவரை மடக்கி சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த 14 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் வீடுஒன்றில் பதுக்கி வைத்திருந்த 70 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த பூபாலன், 29, முரளி, 41, விஜயன், 42 ஆகியோரை ஓடைப்பட்டி போலீசார் கைது செய்தனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர்.