கேரளாவிற்கு கடத்த பதுக்கப்பட்ட 123 கிலோ கஞ்சா பறிமுதல்
கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 123 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.;
தேனி மாவட்டம், கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்- இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் மற்றும் போலீசார் கம்பம் மணிகட்டி ஆலமரம் பகுதியில் சோதனை செய்தனர். கேரளாவிற்கு கடத்திச் செல்வதற்காக அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 123 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.
இது தொடர்பாக, கம்பத்தை சேர்ந்த அன்பு, 25ல, சஞ்சய்குமார், 21, சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்த ரஞ்சித், 26, சுப்பிரமணி, 21 மற்றும் 17வது சிறுவன் ஒருவனையும் கைது செய்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் இந்த கஞ்சாவை இக்கும்பல் கேரளாவிற்கு கடத்திச் செல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.