ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது
ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.;
ஆண்டிபட்டி அருகே வருஷநாடு எஸ்.ஐ., அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மலட்டு ஓடை பாலத்தில் வைத்து கஞ்சா விற்ற ரஞ்சனி, 32 என்ற பெண்ணை கைது செய்தனர்.
அவர் வைத்திருந்த ஒண்ணரை கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். பின்னர் குமணன்தொழு பேடு தெருவில் கஞ்சா விற்ற ஈஸ்வரன் என்பவரை செய்தனர். அவரிடம் இருந்து நான்கு கிலோ கஞ்சாவை கைபற்றினர். கஞ்சா விற்ற இவரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை கைப்பற்றினர்.