வீடு தேடி வரும் விநாயகர் சிலை; சின்னமனூரில் சிற்பி அசத்தல்

சின்னமனுாரில் போன் செய்தால், விநாயகர் சிலை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் திட்டத்தை சிற்பி ஒருவர் செயல்படுத்தி வருகிறார்.;

Update: 2021-08-24 10:30 GMT

தேனி மாவட்டம் சின்னமனுாரில் விநாயகர் சிலைகளை தயாரித்து விற்கும் சிற்பி கண்ணன்.

தேனி மாவட்டம் சின்னமனுாரில் போன் செய்தால் விநாயகர் சிலை வீட்டிற்கே டெலிவரி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் சின்னமனுாரை சேர்ந்தவர் கண்ணன் (55). இவர் 36 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சிலைகளை செய்யும் தொழிலை செய்து வருகிறார். களிமண் சிலைகள், காகிதகூழ் சிலைகளை மட்டுமே செய்து வருகிறார். சிலைகளுக்கு இயற்சை சாயம் பூசி விற்பனை செய்கிறார்.

இதுவரை விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, இவரிடம் ஆர்டர் கொடுத்து பல நாட்கள் காத்திருந்து சிலைகளை வாங்கிச் செல்வார்கள். இந்த ஆண்டு வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி விநாயகர்சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் கண்ணன் முதன் முதலாக போனில் ஆர்டர் கொடுத்தால் சிலைகளை வீடுகளுக்கே கொண்டு வந்து டெலிவரி செய்யும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளார். தேனி மாவட்டத்தில் வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விரும்புபவர்கள் இவரிடம் 9788942141 என்ற நம்பரில் போன் செய்யலாம் என கண்ணன் தெரிவித்தார்.

Tags:    

Similar News